உடலில் காயங்கள் இருப்பதால் யாராவது அடித்துக் கொன்று விட்டு உடனே குளத்தில் வீசி விட்டு சென்றார்களா? அல்லது குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை: குறிச்சி குளத்தில், பிணமாக மிதந்த வாலிபர் உடலில் காயங்கள் இருப்பதால் யாராவது அடித்துக் கொன்று விட்டு உடனே குளத்தில் வீசி விட்டுச் சென்றார்களா? அல்லது குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள குறிச்சி குளம். இந்த குளக்கரை பகுதியை ஒட்டிய சாலையில் பொதுமக்கள் இன்று காலை வழக்கம் போல் நடைப்பயிற்சி சென்றனர்.
அப்போது குளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் இறங்கி அங்கு மிதந்து கொண்டிருந்த வாலிபரின் உடலை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்ட வாலிபருக்கு 35-வயது இருக்கும் எனத் தெரிகிறது. மேலும் இவரது தலை, கை, கால், மூக்கு, பகுதிகளில் காயங்கள் இருந்தாலும், கண்ணிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இதையடுத்து, காவல்துறை அவர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து பிணமாக மீட்கப்பட்ட அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றி விசாரிக்கின்றனர்.
மேலும், உடலில் காயங்கள் இருப்பதால் யாராவது அடித்துக் கொன்று விட்டு உடனே குளத்தில் வீசி விட்டுச் சென்றார்களா? அல்லது குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.