பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மாநில அரசு வரிகளைக் குறைக்க வேண்டும். மாநில அரசு வரிகளைக் குறைத்தால் விலை குறைய வாய்ப்பு இருக்கின்றது என பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் தெரிவித்துள்ளார்.
கோவை: பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மாநில அரசு வரிகளைக் குறைக்க வேண்டும். மாநில அரசு வரிகளைக் குறைத்தால் விலை குறைய வாய்ப்பு இருக்கின்றது என பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் தெரிவித்துள்ளார்.
கோவை குஜராத் சமாஜ் கட்டிடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு.
அதில் அவர் கூறியதாவது:-
இந்தியாவில் 100-கோடி டோஸ் கொரோனா மருத்து போடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 5- கோடிக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3-நாள் பயணத்தில் புதிய உணர்வு ஏற்படுகின்றது. எல்லா இடங்களிலும் தாமரை மலர துவங்கியிருக்கின்றது.
பா.ஜ.க நிர்வாகிகள் கடுமையாக பூத் அளவில் உழைக்கின்றனர். மாநில அண்ணாமலை இரவு பகலாக உழைக்கின்றார். பா.ஜ.க வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்து வருகின்றது.
இந்தியாவின் வளர்ச்சி சதவீதம் உயர்ந்து வருகின்றது. Gdb-உயர்ந்து வருகின்றது. 100-லட்சம் கோடி அளவு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2020 - 21-ல் தமிழகத்திற்கு 3900-கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்குச் சுகாதார கட்டமைப்பிற்கான தேவையான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்கின்றது.
773-கோடி ரூபாய் தமிழக சுகாதார கட்டமைப்பிற்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கின்றது என கூறினார். மத்திய அரசு தமிழகத்திற்குத் தேவையான நிதியினை வழங்குகின்றது.
மாநில அரசு வெளிப்படையாகவும், ஊழல் இல்லாமல் செயல்படுகின்றது என்ற அவர், கொரோனா தொற்று காலத்தில் பா.ஜ.க சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க வை சேர்த்தவர்கள் சிறப்பாகச் செயலாற்றினர் என தெரிவித்தார்.
99.9-சதவீத விவசாயிகள் பிரதமருடன் இருக்கின்றனர். விவசாயிகளின் போராட்டம் உத்திர பிரதேசத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. போராடுபவர்கள் விவசாயிகள் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்களே.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மாநில அரசு வரிகளைக் குறைக்க வேண்டும். மாநில அரசு வரிகளைக் குறைத்தால் விலை குறைய வாய்ப்பு இருக்கின்றது.
பிரியாங்க காந்தி விவசாயிகள் மரணத்தில் அரசியல் செய்கின்றார். ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஏன் செல்ல வில்லை என கேள்வி எழுப்பிய அவர் சட்டீஸ்கர் மாநிலங்களில் பல பிரச்சினைகள், தலித் மாணவி கொலை செய்யப்பட்டிருந்தும் ஏன் செல்ல வில்லை போன்ற கேள்விகளை முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், தூத்துக்குடியில் 4-சதவீத கமிசன் வாங்கிக்கொண்டு கான்டிராக்டர் பில் கிளியர் செய்யப்படுகின்றது.
தூத்துக்குடியில் மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நிலுவையில் உள்ள பில்கள் கேட்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி குறித்துக் குற்றச்சாட்டு சொன்ன பின்னர் "எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை" என்று சொல்வதைப் போல ஏதற்காட டான்ஜெட்கோ இந்த தகவலைக் கேட்டு இ-மெயில் அனுப்ப வேண்டும்.
சில கான்டிராக்டர்களுக்கு மட்டும் பில்கள் கிளியர் செய்யப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார். 1.59 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. இதற்குத் தமிழக மின்வாரியத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதே காரணம்.
தனியாரிடம் மின் கொள்முதல் செய்யப்பட்டது துவங்கி பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளது தான் காரணம். அமைச்சர் செந்தில் பாலாஜி இவற்றை மறுகட்டமைப்பு செய்கிறார். பி.ஜி.ஆர் என்ற நிறுவனத்திற்கு அடுத்த கான்டிராக்ட் கொடுக்க இருக்கின்றனர். அதற்குத்தான் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றது.
செந்தில் பாலாஜி போக்குவரத்து ஊழல், வேலை வாங்கி தருவதாக ஊழல், மணல் ஊழல், இப்போது மின்வாரிய ஊழல் என்ற அவர். ஒரு மனிதருடன் உட்கார்ந்து பேசும்போது தரம் இருக்கவேண்டும். தராதரம் இருக்கவேண்டும். நிச்சயமாகச் செந்தில் பாலாஜியைப் பதில் சொல்ல வைப்போம்.
திமுக எம்.பி. வில்சன் வி்.ஜி.ஆர் எனர்ஜிக்கு நீதிமன்றத்தில் எதற்கு ஆஜராகின்றார். ஒரு புறம் மின்வாரியம் ஆஜராகின்றது. மறுபுறம் திமுக எம்.பி வழகறிஞராக ஆஜராகின்றார். பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனத்தை யார் வாங்கப் போகின்றார்.
நாங்கள் இதை சும்மா விடமாட்டோம். செந்தில் பாலாஜி வாயிலிருந்து பதில் வர வைப்போம். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி வீட்டில், திருப்பூர் மாவட்ட ஆதி திராவிடர் ஹாஸ்டல் சமையலரை மூன்று வேலை சமைக்க வைக்கின்றனர்.
இது தொடர்பான நமக்குச் சொன்ன பெண்ணின் ஆடியோ இருக்கிறது. அதை ரீலீஸ் செய்ய விரும்பவில்லை. ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் வீட்டில் சமைக்க வைப்பதுதான் சமூக நீதியா ? முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நேரில் தலையிட வேண்டும்.
தூத்துக்குடி சிபிசிஐடி எஸ்.பி மின்வாரிய கான்டிராக்டர்களிடம் நேரில் விசாரணை நடத்தி இருக்கின்றார். முதல்வர் செந்தில் பாலாஜி விவகாரத்தை உன்னிப்பாகக் கவனிக்கிறார். தினமும் ஒவ்வொரு விவகாரமாக வெளியிடுவோம் எனத் தெரிவித்தார்.