கோவையில் திருமண ஆசை காட்டி 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை..!

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


கோவை: கோவையில் திருமண ஆசை காட்டி 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கோவை பெரியநாயக்கன்பாளையம், நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (32), டிரைவர். இவர் 16 வயது சிறுமியுடன் நெருங்கி பழகினார். அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.

கடந்த 9.5.2017- அன்று ஆனந்தகுமார் சிறுமியை ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் மகளை காணவில்லை என்று பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது ஆனந்தகுமார் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தகுமாக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...