கோவை ஆழியாறு அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்குத் தண்ணீர் வழங்கக்கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்..!

கோவை: விவசாயிகள் 135 நாட்கள் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில் 80 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்கியதால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: கோவை ஆழியாறு அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 135 நாட்களுக்குத் தண்ணீர் வழங்கக்கோரி வேட்டைக்காரன்புதூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில், விவசாயிகள் 135 நாட்கள் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது 80 நாட்களுக்கு மட்டுமே அதிகாரிகள் தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். இதனால் பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் கிடைக்காது.

விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்து ஆனைமலை அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆழியாறு அணையிலிருந்து 135 நாட்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டோம், ஆனால் அதிகாரிகள் 80 நாட்களாகக் குறைத்து வழங்கியுள்ளார்கள். இதனால் தண்ணீர் கேட்ட விவசாயிகள் தற்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணீர் வடிக்கும் விவசாயிகளுக்கு அரசு கருணை காட்ட வேண்டும்.

அதேபோல், பல்வேறு இடங்களில் அறுவடை செய்த நெல் மற்றும் தேங்காய்களை கொண்டு செல்லும் பாதைகள் அனைத்தும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த சாலைகளை செப்பனிட வேண்டும் என்று பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர் .

இது தொடர்பாக, பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...