கடந்த 2014ம் ஆண்டு மகாவீர் ஜெயந்தி நாளின்போது மது கேட்டு டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திய வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார்.
கோவை: கோவையில் மது கேட்டு டாஸ்மார்க் உரிமையாளரை கத்தியால் குத்திய கூலித் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (38) டாஸ்மாக் பார் உரிமையாளர். கடந்த 2014ம் ஆண்டு மகாவீர் ஜெயந்தி நாளின்போது டாஸ்மாக் பார் மூடப்பட்டிருந்தது.
அப்போது, ரத்தினபுரி 6 முக்கு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான வினோத்குமார் (32), என்பவர் மதுபாட்டில் கேட்டு வந்தார். அதற்கு சேகர் இன்றைக்கு டாஸ்மாக் விடுமுறை மதுபாட்டில் எங்கேயும் கிடைக்காது என்றார்.
இதையடுத்து, அவரிடம் வாக்குவாதம் செய்த வினோத்குமார், மதுபாட்டில் எனக்கு வேண்டும், தராவிட்டால் விட மாட்டேன் என கூறி தகராறு செய்தார். மதுபாட்டில் கிடையாது எனக் கூறிய போது அவரை தாக்கினார். மேலும் தன்னிடம் இருந்த கத்தியால் விரட்டி விரட்டி குத்தினார். இதில் காயமடைந்த சேகர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர், இதுதொடர்பாக ரத்தினபுரி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.
இது குறித்த வழக்கு விசாரணை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வினோத்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.