இந்தியாவில்‌ 80-சதவீத குறு, சிறு, நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ மீளமுடியாத நெருக்கடியில்‌ தவிப்பு- கே.இ. ரகுநாதன்.!!‌

கொரோனா நோய்த்தொற்று பரவல்‌ காரணமாக இந்தியாவில்‌ 80-சதவீத குறு, சிறு, நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ மீளமுடியாத நெருக்கடியில்‌ தவிப்பதாக இந்தியத் தொழில்‌ முனைவோர்‌ சங்கங்களின்‌ கூட்டமைப்பின்‌, ஒருங்கிணைப்பாளர்‌, கே.இ. ரகுநாதன்‌ தகவல்‌.



கோவை: கொரோனா நோய்த்தொற்று பரவல்‌ காரணமாக இந்தியாவில்‌ 80-சதவீத குறு, சிறு, நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ மீளமுடியாத நெருக்கடியில்‌ தவிப்பதாக இந்தியத் தொழில்‌ முனைவோர்‌ சங்கங்களின்‌ கூட்டமைப்பின்‌, ஒருங்கிணைப்பாளர்‌, கே. இ. ரகுநாதன்‌ தெரிவித்துள்ளார்.

குறு, சிறு, நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ மீண்டும்‌ சகஜ நிலைமைக்கு திரும்ப தீவிர சிகிச்சைப்‌ பிரிவில்‌ உள்ள நோயாளிக்கு உயிர்‌ காக்க பயன்படும்‌ ஆக்ஸிஜன்‌ போல மத்திய, மாநில அரசுகளின்‌ உதவி மிக அவசியமானது, என இந்தியத் தொழில்முனைவோர்‌ சங்கங்களின்‌ கூட்டமைப்பு, ஒருங்கிணைப்பாளர்‌, கே.இ.ரகுநாதன்‌ தெரிவித்தார்‌.

கோவையில்‌ இன்று நடந்த பத்திரிகையாளர்‌ சந்திப்பில்‌ அவர்‌ கூறியதாவது:-



குறு, சிறு நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ நாட்டின்‌ தொழில்‌ வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழ்கின்றன. நான்‌ சார்ந்து இருக்கக்கூடிய இந்தியத் தொழில்‌ முனைவோர்‌ சங்கங்களின்‌ கூட்டமைப்பு(CIA), 50-சிறு, வணிக சங்கங்களுடன்‌ ஜூன்‌ 2021-ல்‌ மெகா கணக்கெடுப்பு ஒன்றை நடத்தினோம்‌.

81,000-தொழில்‌ நிறுவனங்களில்‌ நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின்‌ மூலம்‌ MSME-தொழில்‌ துறையின்‌ இன்றைய நிலை குறித்த முழு விவரம்‌ தெரியவந்துள்ளது.

ஏற்கனவே பல குறு, சிறு, நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ கடந்த 2016-முதல்‌ பணமதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது, ஜிஎஸ்ம்‌ திட்டம்‌ அறிமுகப்படுத்தப்பட்டது, பொருளாதார மந்த நிலை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்‌ பாதிக்கப்பட்டு இருந்த சூழலில்‌, கொரோனா நோய்த்தொற்று பரவல்‌ முதல்‌ மற்றும்‌ இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கம்‌ தொழில்துறை இன்று எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்‌ குறித்துக் கணக்கெடுப்பின்‌ மூலம்‌ இடைத்த தகவல்கள்‌ மிகவும்‌ அதிர்ச்‌சி அளிப்பதாக உள்ளன.

* 73 சதவீத சிறு, குறு வணிக நிறுவனங்கள்‌ 2020-21 நிதியாண்டில்‌ லாபம்‌ ஈட்டவில்லை.

* 42 சதவீத தொழில்‌ நிறுவனத்தினர்‌ அவர்களது ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்‌.

* கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முந்தைய காலத்தில்‌ ஒப்பிடும்போது நோய்த்தொற்று பரவலுக்குப் பின்‌ தொழில்‌ நிறுவனங்களில்‌ 59% சதவீத ஊழியர்கள்‌ ஆட்குறைப்பு என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்‌ வேலைவாய்ப்பு இழந்துள்ளனர்‌. (முதல்‌ அலையின்‌ போது 37% இரண்டாவது அலையின்‌ போது 22%).

* கணக்கெடுப்பு நடத்தப்பட்ட தொழில்‌ நிறுவனங்களில்‌, 88 சதவீதத்தினர்‌ இந்திய அரசால்‌ நோய்த்தொற்று பரவல்‌ காலத்தில்‌ தொழில்‌ நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்ட பல்வேறு ஊக்குவிப்பு‌ திட்டங்களில்‌ பயன்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

* 82 சதவீத தொழில்‌ நிறுவனத்தினர்‌ மத்திய மற்றும்‌ மாநில அரசு தாங்கள்‌ எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீண்டு வர உதவுவதற்கு ஆர்வம்‌ காட்டவில்லை எனத் தெரிவித்துள்ளனர்‌.

கடந்த 18 மாதங்கள்‌ எங்கள்‌ தொழில்‌ அமைப்பு சார்பில்‌ MSME தொழில்‌ துறையை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள்‌ குறித்த ஆலோசனைகளை மத்திய மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறோம்‌. இருந்தபோதும்‌ துரதிருஷ்டவசமாக MSME தொழில்‌ துறையினர்‌ எதிர்கொண்டுள்ள பிரச்சனை இன்றைய சூழலில்‌ அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளன.

இதன்‌ காரணமாக தொழில்துறையினர்‌ தங்கள்‌ தொழில்‌ நிறுவனங்களைத் தக்கவைத்துக்‌ கொள்ளவே போராட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதைக் குறிக்கும்‌ வகையில்‌, இன்று நாம்‌ அதிகமாகச் செய்திகளில்‌ காண்பது

* வங்கிகளில்‌ கடனுதவி பெற்று திவால்‌ ஆனவர்கள்‌ எண்ணிக்கை அதிகரித்துக்‌ கொண்டே வருவது.

* அடமானத்திற்கு வங்கிகளில்‌ வைக்கப்பட்ட தங்க நகைகள்‌ வட்டி கட்டி திருப்ப முடியாமல்‌ கடனிலே மூழ்குதல்‌ அதிகரித்து வருவது.

* தினந்தோறும்‌ அதிகரித்து வரும்‌ தொழில்‌ நிறுவனத்தினரின்‌ சொத்துக்கள்‌ ஏலம்‌ குறித்த நோட்டீஸ்‌.

* சிறு-குறு தொழில்களுக்கு வங்கிக் கடன்‌ கொடுப்பது மிகவும்‌ குறைந்துள்ளது.

* வேலையின்மை அதிகரித்து வருவது.

* தொழில்‌ நிறுவனங்கள்‌ மூடப்படுவது

* நிதி உதவியை உரியக் காலத்தில்‌ இருப்பு‌ செலுத்தாதவர்கள்‌ எண்ணிக்கை அதிகரித்து வருவது

இந்த மேற்கொண்ட காரணங்களால்‌ தொழில்‌ முனைவோர்‌ தற்கொலை செய்து கொள்ளும்‌ நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்‌.

எங்களது கோரிக்கை அரசு 3 விதமான நடவடிக்கைகளை சிறு, குறு வணிக நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்‌ என தெரிவிப்பது. அது என்னவென்றால்‌ விலக்கு, பாதுகாப்பு, உதவி (EXEMPT, PROJECT & SUPPORT) என்பதாகும்‌.

விலக்கு

குறு தொழில்‌ நிறுவனங்களின்‌ நிலையைக் கருத்தில்‌ கொண்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குக் கடனை திருப்பி செலுத்தத் தவறியது என்பது உள்ளிட்ட தொழில்‌ சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு அபராதம்‌ விதித்தல்‌ என்பது உள்ளிட்ட எந்தவிதமான சட்டரீதியாக நடவடிக்கையும்‌ நிறுவனங்கள்‌ மீது எடுக்கக்கூடாது.

பாதுகாப்பு

ஏற்கனவே நோய்‌ தொற்று பரவல்‌ காரணமாகத் தொழில்‌ நிறுவனங்கள்‌ நெருக்கடியால்‌ தவித்து வரும்‌ சூழ்நிலையில்‌ மூலப்பொருட்கள்‌ விலை உயர்வு என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளிலிருந்து தொழில்‌ துறையினரை அரசு பாதுகாக்க வேண்டும்‌.

உதவி

குறு தொழில்‌ துறையினருக்குக் கடனுதவி அளித்தல்‌, கடனை திருப்பி செலுத்துவதற்குக் கால அவகாசத்தை நீட்மத்து தருதல்‌, வட்ட செலுத்துவதிலிருந்து ௪ல காலத்துக்கு விலக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு என்பிஏ என்ற திட்டத்தை நிறுத்தி வைப்பது உள்ளிட்டவை ஆகும்‌.

மத்திய அரசு குறு தொழில்‌ நிறுவனங்களுக்குச் செய்ய வேண்டிய உதவிகள்‌

* 5 கோடி ரூபாய்‌ மற்றும்‌ அதற்குக் குறைவாக வணிகம்‌ செய்யும்‌ ஜிஎஸ்டி வரி செலுத்துவதிலிருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முற்றிலும்‌ விலக்கு அளிக்க வேண்டும்‌.

* PF/ESI உள்ளிட்ட திட்டங்களில்‌ இரண்டு ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்‌.

* இரண்டு கோடி ரூபாய்க்கும்‌ குறைவாகக் கடனுதவி பெற்ற தொழில்துறையினர்‌ அனைவருக்கும்‌ 2022 செப்டம்பர்‌ வரை கடனுதவியை திருப்பிச் செலுத்துவதற்கான வட்டியில்லா கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்‌.

* பொதுத்துறை நிறுவனங்கள்‌ மற்றும்‌ கார்ப்பரேட்‌ நிறுவனங்கள்‌ MSME தொழில்‌ நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை பேமெண்ட்‌ உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. இப்போது உள்ள திட்டம்‌ ரூபாய்‌. 1 கோடிக்கு மேல்‌ இருந்தால்‌ மட்டுமே பலனடைய முடியும்‌

* தொழில்‌ நிறுவனங்களுக்கு எவ்வித நிபந்தனையும்‌ இல்லாமல்‌ உடனடியாக கூடுதல்‌ கடன்‌ உதவி வழங்க வேண்டும்‌.

* தற்போது உள்ள கடனுதவி கட்டங்களுக்கு ஒருமுறை செட்டில்மெண்ட்‌ பிரத்யேகமாகச் செயல்படுத்த வேண்டும்‌.

* தொழில்‌ நிறுவனத்தினர்‌ தங்களது சொத்துக்களை விற்று மீண்டும்‌ தொழிலில்‌ முதலீடு செய்வதற்கு உதவி செய்யும்‌ வகையில்‌ அவர்கள்‌ விற்பனை செய்யும்‌ சொத்துக்களுக்கு ௨1௮ வோ வரி விடுப்பு செய்யக்கூடாது.

* மூலப்பொருட்கள்‌ நியாயமான விலையில்‌ தடையின்றி போதுமான அளவு அனைத்து தொழில்‌ முனைவோருக்கும்‌ இடைக்க உதவும்‌ வகையில்‌ நியாய விலைக்‌ கடைகள்‌ மூலம்‌ அவற்றைத் தொழில்‌ நிறுவனத்தினருக்கு நேரடியாக சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

* சரக்கு வாகனங்களுக்கு மட்டுமாவது டீசல்‌ விலையைக் குறைக்க வேண்டும்‌.

* ஏற்றுமதி தொழிலுள்ள குறு தொழில்‌ துறையினர்‌ பயன்பெற உதவும்‌ வகையில்‌ கன்டெய்னர்‌ டெர்மினல்‌ அமைப்பதுடன்‌ தொழில்‌ நிறுவனத்திலிருந்து கப்பலுக்கு நேரடியாகப் பொருட்களைக்‌ கொண்டு செல்ல உதவ வேண்டும்‌.

* தொழில்‌ நிறுவனங்கள்‌ மூடப்படுவதைத் தடுக்க அடுத்த ஓராண்டுக்கு NPA என்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்‌.

*மிகக்குறைந்த வட்டி விகிதத்தில்‌ குறு தொழில்‌ துறையினருக்குக் கடனுதவி அளிக்க வேண்டும்‌.

*அபராதம்‌ செலுத்துதல்‌, காலதாமதமாக பேமெண்ட்‌ செலுத்தியதற்கான வட்டி உள்ளிட்டவற்றை நீக்க வேண்டும்‌.

* அனைத்து நகைக் கடன்களையும்‌ பொதுத் துறை வங்கிகளே ஏற்றுக் கொண்டு, ஒரு வருட வட்டியில்லா தவணை வழங்க வேண்டும்‌

தமிழக அரசு குறு தொழில்‌ நிறுவனங்களுக்குச் செய்ய வேண்டிய உதவிகள்‌:

'மேக் இன்‌ தமிழ்நாடு' திட்டத்தைத் தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும்‌ என்றால்‌ அதற்கென பிரத்தியேக அமைச்சகத்தை உருவாக்கி அமைச்சரை நியமித்துக் குறிப்பாகக் குறுந்தொழில்‌ முனைவோரை ஊக்குவிக்க வேண்டும்‌.

MSME தொழில்‌ துறையினர்‌ நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு ஜூலை மாதம்‌ அமைக்கப்பட்ட கமிட்டி மூன்று மாதங்கள்‌ கடந்த நிலையில்‌ தமிழக அரசுக்கு அவர்களின்‌ ஆலோசனைகள்‌ வழங்கப்படாத நிலை உள்ளது.

குறுந்தொழில்‌ துறையினர்‌ எதிர்கொண்டுள்ள பிரச்சினை என்பது தனியாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்‌. எனவே MSME பிரிவிலிருந்து குறுந்தொழில்‌ என தனியாகப் பிரிக்கப்பட்டு அத்துறைக்கு அதிக முக்கியத்துவம்‌ அளிக்க வேண்டும்‌.

* தமிழ்நாடு கல்லூரிகளில்‌ பட்டப்‌ படிப்பு முமத்த மாணவர்களுக்கு மாதம்‌ 6,000 ரூபாய்‌ ஆறு மாதங்கள்‌ வழங்கி அவர்கள்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்களில்‌ பயிற்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

* தமிழகத்தில்‌ உள்ள அனைத்து தொழில்பேட்டை வளாகங்களிலும்‌ நியாயவிலைக்கடை அமைக்கப்பட்டு மூலப்பொருட்கள்‌ நியாயமான விலையில்‌ தேவையான அளவு தொழில்‌ துறையினருக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

* குறுந்தொழில்‌ துறைக்கு என பிரத்தியேகமாக வழிகாட்டுதல்‌ அமைப்பை தமிழக அரசு அமைக்க வேண்டும்‌.

* தமிழகத்தில்‌ உள்ள சிறு குறு தொழில்‌ துறையினர்‌ தங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதற்கு உதவும்‌ வகையில்‌ 'ஆன்லைன்‌ ஆப்‌' துவக்கி ப்ளிப்கார்ட்‌ அமேசான்‌ உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன்‌ விற்பனை நிறுவனங்கள்‌ மாதிரி விற்பனை செய்ய தமிழக அரசு துவங்க வேண்டும்‌.

* ஒரு கோடி ரூபாய்க்கும்‌ கீழ்‌ உள்ள அரசு டெண்டர்களில்‌ தமிழகத்தில்‌ உள்ள குறுந்தொழில்‌ நிறுவனங்கள்‌ மட்டுமே பங்கு பெறும்‌ வகையில்‌ சட்டம்‌ இயக்க வேண்டும்.‌

* மின்‌ கட்டணம்‌ குறைப்பு மற்றும்‌ சலுகை வழங்க வேண்டும்‌.

* அடுத்த ஓராண்டுக்கு குறுந்தொழில்‌ நிறுவனங்கள்‌ சொத்து வரி தண்ணீர்‌ வரி உள்ளிட்ட வரி செலுத்துவதில்‌ இருந்து முற்றிலும்‌ தமிழக அரசு விலக்கு அளிக்க வேண்டும்‌.

அனைத்து நகை கடன்களையும்‌ பொது துறை வங்கிகளே ஏற்று கொண்டு, ஒரு வருட வட்டியில்லா தவணை வழங்க வேண்டும்‌ தற்போதைய சூழ்நிலையில்‌ தொழில்துறையினர்‌ அவர்கள்‌ ஈட்டும்‌ லாபத்தை விட அரசுக்கு MSME வரியை செலுத்தி வருகின்றனர்‌.

எனவே MSME தொழில்‌ துறையினர்‌ அரசுக்கு செலுத்தும்‌ வரி விகிதத்தை முற்றிலும்‌ மாற்றி அமைக்க வேண்டும்‌.

இவ்வாறு ரகுநாதன்‌ கூறினார்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...