கோவையில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக வாக்கெடுப்பு - திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு..!

கோவை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று திமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் மற்றும் கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: கோவை மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று திமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் மற்றும் கவுன்சிலர்கள் ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.

கோவையில் மாவட்ட ஊராட்சி துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக வாக்கெடுப்பு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கியது.



இந்த தேர்தலில் அதிமுக 9 கவுன்சிலர்களும், திமுக 6 கவுன்சிலர்களும், பாரதிய ஜனதா கட்சியில் 2 கவுன்சிலர்களும் உள்ளார்கள். அதிமுகவை சார்ந்த சாந்திமதி, தோப்பு அசோகன் மாவட்ட ஊராட்சி தலைவராக உள்ளார். அதிமுக மாவட்ட ஊராட்சி துணை தலைவராக இருந்த அமுல் கந்தசாமி ராஜினாமா செய்ததை அடுத்து. இப்பொழுது அந்த பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.



இதில் அதிமுக சார்பாக ராதாமணியும், திமுக சார்பாக ஆனந்தனும் மாவட்ட ஊராட்சி துணை தலைவருகான பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.



இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் திமுக வெளிநடப்பு செய்துள்ளது.

அப்போது, தேர்தல் சுதந்திரமாக நடக்கும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என திமுக கவுன்சிலர்கள் புகார் அளித்தனர். அதிமுக வழக்கறிஞர்கள் தேர்தல் நடைபெறும் அறையின் அருகில் அமர்ந்து கொண்டு சுதந்திரமாக தேர்தல் நடக்கும் சூழலை கெடுப்பதாக திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டி, தேர்தல் நடைபெறும் அறையில் இருந்து திமுக கவுன்சிலர்கள் 6 பேரும் வெளியேறினர்.



இதனை தொடர்ந்து, கோவை மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று திமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் மற்றும் கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...