மோசடி வழக்கில் கைதான கோவை தங்கம் மருமகன் மருத்துவமனையில் திடீர் அனுமதி..!

சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அருள்பிரகாஷ் தனது உடல்நிலை சரியில்லை என போலீசாரிடம் தெரிவித்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


கோவை: மோசடி வழக்கில் கைதான கோவை தங்கம் மருமகன் மருத்துவமனையில் திடீர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை சாய்பாபா காலனி கணபதியைச் லே-அவுட்டை சேர்ந்த அருண் பிரகாஷ். முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கத்தின் மருமகனான இவர் ரியல் எஸ்டேட் ஓட்டல் உள்பட பல்வேறு தொழில்களையும் செய்து வந்தார்.

இந்நிலையில், அருண் பிரகாஷ் தொழில் தொடங்குவதாக கூறி பீளமேடு சித்ரா சசி அவன்யூ பகுதியைச் சேர்ந்த சிந்துஜா என்பவரிடம் ரூபாய் 7 கோடியும், அவரது தந்தையிடம் ரூபாய் 11/2 கோடியும் வாங்கியுள்ளார். ஆனால், தொழில் எதுவும் தொடங்காமல் இருந்து வந்தார்.

இதையடுத்து, பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்ட போது அதனை தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சிந்துஜா மற்றும் அவரது தந்தை செங்குட்டுவன் ஆகியோர் தனித் தனியே போலீசில் புகார் கொடுத்தனர்.

இந்த நிலையில், சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவன் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 19ம் தேதி பிரகாஷை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் அப்போது நீதிபதி அவரை திருப்பூர் அவினாசி கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் வாகனத்தில் அவிநாசி நோக்கி அழைத்துச் சென்றனர்.

இதனிடையே, சிறைக்கு அழைத்துச் செல்லக்கூடிய வழியில் அருள்பிரகாஷ் தனது உடல்நிலை சரியில்லை என பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, போலீசார் வாகனத்தை திருப்பி அவரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை அங்கு சிறைக் கைதிகள் சிகிச்சை பெறக் கூடிய வார்டில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...