கோவை மாவட்ட காவல்துறை சார்பில் வீட்டை உடைத்து நடைபெறும் கொள்ளையை தடுக்கும் விதமாக புதிய செயலி அறிமுகம்..!!

வீடு புகுந்து நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் துறை சார்பில் சகோ (Safe Kovai) என்ற புதிய பாதுகாப்பு செயலியை எஸ்.பி செல்வநாகரத்தினம் அறிமுகம் செய்து வைத்தார்.



கோவை: கோவையில் வீடு புகுந்து நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் துறை சார்பில் சகோ என்ற புதிய பாதுகாப்பு செயலியை எஸ்.பி செல்வநாகரத்தினம் அறிமுகம் செய்து வைத்தார்.



(Safe Kovai ) சகோ என்ற செயலி மூலம் வெளியூறு செல்லும் பெதுமக்கள் தங்கள் வீட்டின் முகவரி, பெயர், புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பதிவுகள் உடனடியாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு, சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆப் மூலமே தகவல் அனுப்பப்படுகிறது.

மேலும், இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் டேப் (Tab) வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப் மூலம் பதிவு செய்யப்பட்ட வீட்டின் முகவரிக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் ரோந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது வரை பூட்டிய வீடுகள் குறித்த தகவல்கள் போலீசார் ரோந்து செல்லும் போது மட்டுமே கண்டறியப்படும்.



ஒரு நாளைக்கு மாவட்டம் முழுவதும் 100 முதல் 120 வீடுகள் மட்டுமே கண்டறிய முடிந்தது. இந்த செயலி மூலம் பதிவு செய்தால் கூடுதலாக பூட்டிய வீடுகளை கண்டறிந்து பாதுகாப்பு வழங்க முடியும் என எஸ்.பி. செல்வநாகரத்தினம் தெரிவித்தார். பொதுமக்கள் இந்த செயலி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.



அதே போல், கட்டண அடிப்படையில் வெளியூர் செல்லும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவைப்பட்டால் சிசிடிவி மற்றும் சென்சார்கள் கருவிகளை பொருத்தவும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...