விமானப்படை அதிகாரி பாலியல் பலாத்கார வழக்கு; கோவையில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நாளை விசாரணை..!

கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போது, விமானப்படை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு ஏர்போர்ஸ் சட்டப்பிரிவு அதிகாரிகள் மனு செய்தனர். இதற்கு மகளிர் போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


கோவை: கோவையில் விமானப்படை அதிகாரி பலாத்கார வழக்கில் மகளிர் காவல் துறையே விசாரிக்க அனுமதி கோரிய மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

கோவை, ரெட்பீல்ட்ஸ் விமானப்படை கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த, டில்லியை சேர்ந்த 28 வயது விமான படை பெண் அதிகாரியை, சக அதிகாரி அமித்தேஷ் ஹர்முக் (29), பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.

கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போது, விமானப்படை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு ஏர்போர்ஸ் சட்டப்பிரிவு அதிகாரிகள் மனு செய்தனர். இதற்கு மகளிர் போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு மனு விசாரணை முடிவில், விமானப்படை விசாரணை அதிகாரிகளிடம் அமித்தேஷை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மகளிர் போலீசார் மற்றும் விமானப்படை நிர்வாகத்தினர் விசாரணை குறித்து நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த விசாரணை மீண்டும் நாளை 23ம் தேதி நடக்க உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...