கோவையில் தொடர் திருட்டு... ஒரே நாளில் 3-இடங்களில் திருட்டு அச்சத்தில் மக்கள்.!!

கோவையில் உதிரிப்பாகங்கள் விற்பனை கடை, கோவில் உண்டியல், ஆசிரியர் வீடு, போன்ற இடங்களில் ஒரே நாளில் மூன்று திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன. தொடர் திருட்டு சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


கோவை: கோவையில் உதிரிப்பாகங்கள் விற்பனை கடை, கோவில் உண்டியல், ஆசிரியர் வீடு, போன்ற இடங்களில் ஒரே நாளில் மூன்று திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன. தொடர் திருட்டு சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோவையில் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் ரூபாய் 77 ஆயிரம் பணம் கொள்ளை அடித்தவர்கள் காவல்துறை தேடி வருகின்றனர்.

கோவை பீளமேடு அருகே உள்ள பி.ஆர்.எஸ், கார்டனை சேர்ந்தவர் சபீர் மதராஸ் வயது(41) இவர் பட்டேல் ரோட்டில் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். இன்று காலை கடையைத் திறக்க சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சபீர் மதராஸ் வாலா கடையின் உள்ளே சென்று பார்த்தார் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையின் கல்லாவில் இருந்த ரூபாய் 7,600 பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சபீர் மதராஸ் வாலா காட்டூர் போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகிறார்கள்.

இதேபோன்று, பெரியநாயக்கன்பாளையம் தாமும் நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் வயது (41), இவர் சிறுமுகையில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 17-ம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் திருநல்லூர் கோவிலுக்குச் சென்றார். பின்னர் நேற்று அவர் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 8-பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தங்கராஜ் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று பொள்ளாச்சி அடுத்து ஆராய்ச்சி பட்டியைச் சேர்ந்தவர் பஞ்சலிங்கம் (71), இவர் ஒக்கிலி பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார்.

நேற்று பஞ்சலிங்கம் இரவு கோவிலில் பூஜை முடித்து விட்டு கோவிலைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். காலை வழக்கம் போல பஞ்சலிங்கம் கோவிலுக்குச் சென்றார்.

அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் 7,000 மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் வடக்கிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். காவல்துறை வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் தொடர் திருட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...