கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய பகுதியில் அடிப்படை பணிகள் மந்தம்.!!

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய பகுதியில் அடிப்படை பணிகள் மந்தமாக நடைப்பெற்று வருவதாக, ஊராட்சி ஒன்றிய குழு அவசர கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய பகுதியில் அடிப்படை பணிகள் மந்தமாக நடைப்பெற்று வருவதாக, ஊராட்சி ஒன்றிய குழு அவசர கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் அவசர கூட்டம் ஒன்றிய குழு தலைவர் நாகராணி கனகராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.



இக்கூட்டத்திற்கு கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கணேசன், ஒன்றிய குழு துணைத் தலைவர் எம்.எம்.ஆர்.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன் வரவேற்று பேசினார்.

முன்னதாக வரவு செலவு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர் பேசிய ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் வார்டு பகுதிகளுக்கு மின் விளக்குகள் ஒதுக்கப்பட்டு இதுவரை பொருத்தப்படாமல் உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் அடிக்கடி எங்களிடம் கோரிக்கை வைக்கின்றனர். உடனடியாக மின்விளக்குகளைக் கிராமப் பகுதிகளில் பொருத்த நிதி ஒதுக்கி பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.



கடந்த கூட்டத்தின் போது வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் உள்ளது, அதனை விரைந்து முடிக்க வேண்டும். ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதிகளுக்குக் கேட்கும் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றித் தருவது அவசியம் என்றனர்.

பின்னர் பேசிய ஒன்றியக்குழு தலைவர் நாகராணி கனகராஜ் பேசியதாவது:- ஒன்றிய கவுன்சிலர்கள் வார்டு பகுதிகளுக்குத் தேவையான பணிகளை விரைந்து முடிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பொதுநிதியில் எவ்வளவு இருப்பு உள்ளது, பணிகள் எவ்வளவு நடைபெறுகிறது என்ற விபரங்களை ஆணையாளர் தெளிவுபடுத்த வேண்டும் பேசினார்.

பின்னர் பேசிய ஆணையாளர் கணேசன், பணிகள் அனைத்தும் விரைந்துமுடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நிதி விபரங்கள் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...