பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளை சந்திப்பதற்கு தகவல் தெரிவித்தவர் யார்?

குற்றவாளிகளை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்த நபர் யார்? அப்படியே உறவினர்கள் பார்க்க விரும்பினாலும், பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் விதியை மீறி குற்றவாளிகளைச் சந்திக்கச் சலுகை வழங்கியது யார்? என அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளைச் சந்திப்பதற்குத் தகவல் தெரிவித்தவர் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹாரன் பால், பாபு, அருளானந்தம், அருண் குமார் உட்பட 9-பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் திருநாவுக்கரசு சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று வழக்கு விசாரணைக்காகத் திருநாவுக்கரசு உட்பட 5-பேரையும் காவல்துறை தனி வாகனத்தில் கோவை மகளிர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

அப்போது கோவை விமான நிலையம் அருகே சென்ற போது இவர்களது வாகனம் திடீரென நிறுத்தப்பட்டது. வாகனம் நின்றதும் அதற்கு ஏற்கனவே காத்திருந்த குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 5-பேரின் உறவினர்களும் அவர்களைச் சந்தித்தனர்.

ஐந்து நிமிடங்களுக்கு மேலாகக் குற்றவாளிகள் தங்கள் உறவினர்களுடன் பேசியதாகத் தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. தொடர்ந்து 7-போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழியாகத்தான் குற்றவாளிகள் அழைத்துச் செல்லப்படும் வாகனம் வரும் சரியாக இத்தனை மணி அளவில் இந்த இடத்தில் நீங்கள் காத்திருந்தால் அவர்களைச் சந்திக்கலாம் என்பதை எப்படி உங்களுக்குத் தெரியும் எனவே அவர்களுக்கு யாரோ ஒரு நபர் தகவல் கொடுத்துள்ளார்.

அதன்படியே உறவினர்களும் அங்கு காத்திருந்த சந்தித்துள்ளனர். குற்றவாளிகளை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்த நபர் யார் அப்படியே உறவினர்கள் பார்க்க விரும்பினாலும் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் விதியை மீறி குற்றவாளிகளைச் சந்திக்கச் சலுகை வழங்கியது.

எதற்காக யாராவது சந்திக்க அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். என்பது குறித்தும் உயர் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...