கிணத்துக்கடவில் உலக அயோடின் குறைபாடு தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.!!

உலக அயோடின் குறைபாடு தடுப்பு தினம்- கிணத்துக்கடவு அருகே சேரிபாளையம் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: உலக அயோடின் குறைபாடு தடுப்பு தினம்- கிணத்துக்கடவு அருகே சேரிபாளையம் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத் துறையினர் சார்பில் உலக அயோடின் குறைபாடுகள் தடுப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.



கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா உத்தரவு பேரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சேரிபாளையம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி தலைமை தாங்கினார்.

மருத்துவ அலுவலர் டாக்டர் கவிதா முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் திலீப்குமார், வட்டார விரிவாக்கக் கல்வியாளர் ஜோதிமணி ஆகியோர் கலந்துகொண்டு அயோடின் குறைபாடுகள் தடுப்பது குறித்து பள்ளி மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினர்.

அயோடின் சத்து குறைபாடு ஏற்பட்டால் தைராய்டு சுரப்பி பிரச்சனை, முன் அறிவுத்திறன் குறைபாடு, காதுகேளாமை பிரச்சனை, நரம்பு பிரச்சனை மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு, குழந்தை இறப்பு, குழந்தையின் நுண்ணறிவு குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்றும், அயோடின் கலந்த உப்பை நாள்தோறும் அனைவரும் ஒரு கரண்டி உபயோகிக்க வேண்டுமென்றும், கடையில் விற்பனை செய்யும் உப்பில் உதிக்கும் சூரியன் போன்ற முத்திரை பதித்த உப்பை உபயோகிக்க வேண்டும் என்றும் விழிப்பு நிகழ்ச்சியின் போது சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் பள்ளி சிறார் நலத்திட்டக் குழு உறுப்பினர்கள், மருத்துவ பணியாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜகோபால், பள்ளி ஆசிரியர் வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...