கோவை தொண்டாமுத்தூரில் மலைக் கிராமங்களில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகள் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!

தொண்டாமுத்தூரில் உள்ள சீங்கபதி மற்றும் சர்க்கார் போரத்தி மலைக் கிராமங்களில் பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் சீங்கபதி மற்றும் சர்க்கார் போரத்தி மலைக் கிராமங்களில், கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகள் பணிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்தார்.

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சீங்கபதி மற்றும் சர்க்கார் போரத்தி ஆகிய மலைக் கிராமங்களில், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம், முதலமைச்சரின் பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

அதன்படி, சீங்கபதியில் 1.26 கோடி ரூபாய் மதிப்பில் 42 வீடுகளும், சர்க்கார் போரத்தியில் ரூ.26 லட்சம் மதிப்பில் 8 வீடுகளும், சூரிய ஒளி மின்சார வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேற்று ஆய்வு செய்தார். கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வீடுகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பின், சீங்கப்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...