கோவையில் இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6-பேர் கைது: ரூ.99.20 லட்சம் போலி நோட்டுகள் பறிமுதல்.!!

கோவையில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.99.20 லட்சம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6-பேரை கைது செய்து கவச உடை, ஆக்சிஜன் சிலிண்டர்களை போலீஸ் கைப்பற்றியது.



கோவை: கோவையில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.99.20-லட்சம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6-பேரை கைது செய்து கவச உடை, ஆக்சிஜன் சிலிண்டர்களை போலீஸ் கைப்பற்றியது.

கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்துப் பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் உள்ளதாகக் கூறி ஒரு கும்பல், கேரளாவைச் சேர்ந்த நபர்களிடம் சோதனை செய்து காட்டி வருவதாகச் செட்டிபாளையம் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதை அடுத்து அங்கு சென்ற காவல்துறை வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அங்கு கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள், கவச உடை, ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வீட்டிலிருந்த 8-பேரிடமும் காவல்துறை தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரிடியம் மற்றும் ரைஸ் புல்லிங் விற்பனை மோசடிக்குக் கூடியிருந்தது தெரியவந்தது.

முதல்கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் ராணிப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ்குமார், சூரியகுமார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த போஜராஜ், கோவையைச் சேர்ந்த முருகேசன் சேர்ந்த செந்தில்குமார், வெங்கடேஷ் பிரபு என்பதும் இவர்கள் கேரளாவைச் சேர்ந்த ரைஸ் புல்லிங் மோசடி கும்பலை சேர்ந்த சாஜி என்பவருடன் சேர்ந்து பணத்தேவை மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக ரைஸ் புல்லிங் தேவைப்படுவோரை இடைத்தரகர்கள் மூலம் தேர்ந்தெடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

தற்போது கேரளாவைச் சேர்ந்த மகரூப், அப்துல் கலாம் ஆகிய இரண்டு பேரை அணுகி தங்களிடம் 2-ஆயிரம் கோடி மதிப்பிலான இரிடியம் ரைஸ் புல்லிங் இருப்பதாகக் கூறிய இந்த கும்பல் பல தவணைகளாக ரூ.27-லட்சம் வரை பணத்தைப் பெற்றுள்ளனர்.

ஆனால் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படாமல் இருக்க இந்த கும்பல் சோதனை செய்து காட்டியும் பணம் பறித்து வந்துள்ளனர். சாதாரண வெங்கல செம்பை பெட்டிக்கு வைத்து, பெட்டிக்குள் மிளகாய் பிரேவை அடித்து வைத்துக்கொள்கின்றனர்.

பின்னர் வாங்க வருவோரிடம் செய்வோரிடம் கவச உடைகளை அணிந்து கொண்டு வெளியே எடுக்கும் போது அந்த இரிடியத்திற்கு சக்தி உள்ளது போல காட்டி ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.



இந்த கும்பலை 6-பேரையும் பிடித்த காவல்துறை அவர்களிடமிருந்து 99.20-லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், இரண்டு கவச உடைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் 2-கார்களை பறிமுதல் செய்தனர்.



மேலும் இந்த மோசடியில் ஈடுபட்டுத் தலைமறைவான கேரளாவைச் சேர்ந்த சாஜி என்பவரை இரண்டு தனிப்படை அமைத்து காவல்துறை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...