கோவையில் கோஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை ஆரம்பம்..! மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!!

கோஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையின் இலக்காக தமிழ்நாடு முழுவதும் 200 கோடி நிர்ணயம் செய்துள்ளனர். கோவையில் ரூ.25 கோடி நிர்ணயம் செய்துள்ளனர்.


கோவை: கோவையில் கோஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

இந்தியாவில் உள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் திகழ்கிறது. இதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் ஆதரவும் தான் காரணம்.

இந்த நிலையில், கோஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.



அதன் ஒரு பகுதியாக, கோவை வ.உ.சி சாலையில் உள்ள மருதம் கோஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.



அதனை தொடர்ந்து, முதல் விற்பனையையும் துவக்கி வைத்தார்.



மேலும், கோ-ஆப்டெக்ஸில் 30% தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கப்பட்டுள்ளது. கோஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையின் இலக்காக தமிழ்நாடு முழுவதும் 200 கோடி நிர்ணயம் செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் 25 கோடி நிர்ணயம் செய்துள்ளனர்.



மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மங்கையர் விரும்பும் மென்பட்டு சேலைகள், சுப முகூர்த்த திருமண பட்டு சேலைகள், ஆர்கானிக் சேலைகள், பருத்தி சேலைகள், காட்டன் சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதார், ரெடிமேட் சட்டைகள், வேஷ்டிகள். கைலிகள் ஆகியவை, நவீன டிசைன்களில் உற்பத்தி செய்யப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...