கோவையில் கழிவு நீர் வீடுகளுக்குள் புகும் பிரச்சனை சரி செய்யப்படாவிட்டால் மாநகராட்சி முற்றுகையிடப்படும் - வேலூர் இப்ராகிம் எச்சரிக்கை..!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்கம் பகுதி அருகே உள்ள தியாகி சிவராம் நகர் பகுதியில் கழிவு நீர் வீடுகளுக்குள் புகும் பிரச்சனை உள்ளதாக தெரிவித்தார்.


கோவை: கழிவு நீர் வீடுகளுக்குள் புகும் பிரச்சனை சரி செய்யப்படாவிட்டால் மாநகராட்சி முற்றுகையிடப்படும் என பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராகிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராகிம் கோவையில் செய்தியாளர்களை இன்று பாஜக அலுவலகத்தில் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்கம் பகுதி அருகே உள்ள தியாகி சிவராம் நகர் பகுதியில் கழிவு நீர் வீடுகளுக்குள் புகும் பிரச்சனை உள்ளது. இதுவரை அப்பிரச்சனையை திமுக அரசாங்கம் சரி செய்யவில்லை, இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு தேவை. பிரச்சனை சரி செய்யப்படாவிட்டால் மாநகராட்சி முற்றுகையிடப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.



மேலும், ஏழை இஸ்லாமிய குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிப்பதற்கான உதவியை கோவை மாவட்ட பாஜக செய்துள்ளது என்ற அவர், தொடர்ந்து இஸ்லாமியர்களின் வாழ்வாதாரம் காப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.

பணியிட மாற்றம், பணியிடை நீக்கம் உள்ளிட்ட செயல்பாடுகளால் அரசு ஊழியர்களின் எதிர்ப்பை திமுக அரசு பெற்றுள்ளது என்று கூறிய அவர், தற்போது காவல்துறையின் மூலம் அத்துமீறும் அரசாக திமுக அரசாங்கம் இருக்கிறது என்றார்.

மேலும், திமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் சீர்கெட்டு போயிருக்கிறது, காவல்துறையை வைத்து என்னை மிரட்டுகிறார்கள். தர்காவிற்கு செல்லும் போது என்னை வழிமறித்து கைது செய்கிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்று குற்றம்சாட்டினார்.

கோவிலில் உள்ள தங்க நகைகளை விற்கும் திட்டத்தால் பல்வேறு ஊழல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால், பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் செயலில் திமுக அரசாங்கம் ஈடுபடுகிறது.

திருமாவளவனை திருநங்கைகளோடு கூட ஒப்பிட முடியாது. பிரதமரை கொலைகாரன் என்று கூறும் இவர்கள் தேச விரோதிகள். மின்சார வாரியம் குறித்து மாநிலத் தலைவர்‌ அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரம் இல்லாதவை அல்ல. ஆதாரம் இல்லாமல் ஒருபோதும் பாஜக எந்த குற்றச்சாட்டையும் முன் வைப்பதில்லை.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...