கோவையில் அரசு பேருந்தில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவன் படுகாயம்..! ஓடும் பேருந்தில் மாணவனை இறங்க கூறிய நடத்துநர், ஓட்டுநர் மீது வழக்கு!

மாணவனின் தந்தை கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் பேருந்தில் இருந்து இறங்கும்போது வேகமாக பேருந்தை இயக்கியதால் பள்ளி மாணவன் தவறி விழுந்த சம்பவம் தொடர்பாக ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் கார்த்திகேஷ்வரன் (15). கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் கடந்த 7ம் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பும்போது கோவை காந்திபுரத்திலிருந்து-வாளையார் நோக்கிச் செல்லும் 96ம் எண் அரசு பஸ்சில் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்து நடத்துனரிடம் பி.கே புதூர் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

அப்போது நடத்துநர், ‘‘பள்ளி மாணவர்களால் இதே தொந்தரவாக போய்விட்டது. காசு இல்லை என்றால் எதிலே வேண்டுமானாலும் ஏறுவது, எங்கே வேண்டுமானாலும் இறங்குவது’’ என கூறி கார்த்திகேஷ்வரனை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் பி.கே புதூர் நிறுத்தம் அருகே வந்தபோது, பஸ் சென்று கொண்டிருக்கும்போதே இறங்கு இறங்கு என அவரை இறங்க சொல்லியுள்ளார்.

அப்போது, இறங்க முற்பட்ட மாணவன் பேருந்தில் இருந்து தவறி விழுந்துவிட்டார். இதில் அவரது வலது காலில் தொடைப்பகுதி, முழங்காலுக்கு மேல் வீக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து, மாணவனின் தந்தை நாகராஜ் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை (மேற்கு) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...