தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூபாய் 15 கோடி போனஸ் அறிவிப்பு..!

உட்பிரையர் நிறுவனத்திற்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் உள்ள 5500 தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு போனசாக 9.24 சதவீதம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் தேனி மாவட்டம் ஹைவேஸ் ஆகிய உட்பிரையர் நிறுவனத்திற்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் உள்ள 5500 தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு போனசாக 9.24 சதவீதம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல் வால்பாறை, கூடலூர் ஆகிய பகுதியில் உள்ள பாரி அக்ரோநிறுவனத்திற்குச் சொந்தமான தோட்டங்களில் உள்ள ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை, நெல்லை மாவட்டம் மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் உள்ள பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றும் 3,500 தோழர்களுக்கு 8.50 சதவீதம் போனஸ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறையில் உள்ள பெரிய கருமலை தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் 2000 தொழிலாளர்களுக்கு ஒன்பது சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. வால்பாறை மற்றும் கேரள மாநிலம் மழுக்குப்பாறை பகுதியில் உள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் 4200 தொழிலாளர்களுக்கு 8.50 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மொத்தத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, கேரளா உள்ளிட்டவை பணியாற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு போனசாக ரூபாய் 15 கோடி வழங்கப்படுகிறது. இந்த போனஸ் தொகையானது தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் இன்றுமுதல் செலுத்தப்படுகிறது.

இது குறித்து தேயிலைத் தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் வால்பாறை வீ.அமீது கூறியதாவது,

உட் பிரயர் துணைத்தலைவர் பாலச்சந்தர், குரூப் மேலாளர் ரஞ்சித், பேரி அக்ரோ துணை தலைவர் மகேஷ் நாயர், தமிழ்நாடு ஆனைமலை தோட்ட அதிபர் சங்க தலைவர் திம்பையா, டாட்டா குரூப் மேலாளர் அச்சையா, கருமலை எஸ்டேட் துணைத்தலைவர் எஸ் வி சிங் உட்பட்டோர் ஒன்று கூடி ஒப்பந்தம் இல்லாமல் நிர்வாகங்கள் போனஸ் அறிவித்துள்ளன.

தொழிலாளர்களின் கடினமான உழைப்பு இருந்தும் இந்த போனஸ் அறிவிப்பு தொழிலாளர்களுக்கும் தொழிற் சங்கங்களுக்கும் திருப்தி அளிக்கவில்லை. கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களுக்கு அடுத்தாண்டு கூடுதலாக போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு அறிவித்த சம்பளத்தை வழங்க நிர்வாகங்கள் முன்வர வேண்டும், தொழிலாளர்களுக்கு தேவையான மருத்துவ வசதி குடியிருப்பு பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், உற்பத்தியை பெருக்கவும் தொழிலில் அமைதியை நிலை நாட்டவும் ஒத்துழைப்பு நல்குவோம், மேலும் தொழிலாளர்கள் போனஸ் பணத்தை வங்கியில் இருந்து எடுக்க வசதியாக முடீஸ் கருமலை சோலையாறு அணை பகுதியில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட வேண்டும், மொபைல் ஏடிஎம் மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்க கூட்டுக் குழு தலைவர் வால்பாறை வீ.அமீது கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...