பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிறைக்கு செல்லும் வழியில், குற்றவாளிகளை உறவினர்களுடன் பேச அனுமதித்த 7 போலீசார் சஸ்பெண்ட்..!

விதிமுறைகளை மீறிய, ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ., சுப்ரமணியம், போலீசார் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ் குமார் மற்றும் கார்த்தி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.



கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களை, சிறைக்கு அழைத்து செல்லும் வழியில், உறவினர்களுடன் பேச, சேலம் போலீசார் அனுமதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகளுக்கு சலுகை அளித்த 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டையே உலுக்கிய கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளது 9 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணைக்காக, 9 பேரும் , நேற்று கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிந்த பின், இரு வாகனங்களில், கோவையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு நேற்று மாலை அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

அப்போது, வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோர் சென்ற வாகனம், கோவை, நீலாம்பூர் டோல்கேட் அருகில் திடீரென நிறுத்தப்பட்டது. சாலையோரத்தில், இந்த ஐந்து பேரின் உறவினர்களும் தயாராக நின்றிருந்தனர். வாகனத்தில் இருந்த கைதிகளுடன் உறவினர்கள் சிறிது நேரம் உரையாடி உள்ள விடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதன்பின், அந்த வாகனம் புறப்பட்டு சென்றது. இவர்களுக்கு, சேலம் போலீசார் அளித்த இந்த சிறப்பு சலுகை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கைதிகளை பார்க்க வேண்டுமென்றால், சிறையில் முறைப்படி மனு அளித்து பார்க்கலாம். ஆனால், இதுபோன்று ரோட்டில் ஆட்கள் நடமாட்டம் குறைவான பகுதியில், திட்டமிட்டு வாகனத்தை நிறுத்தி, உறவினர்களை சேலம் போலீசார் பேச அனுமதித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், விதிமுறைகளை மீறிய, ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ., சுப்ரமணியம், போலீசார் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ் குமார் மற்றும் கார்த்தி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...