பாலியல் தொல்லை, குடிகார கணவன்: திருப்பூரில் 'மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்'- பெற்றோர் தர்ணா போராட்டம்.!!

மகளின் சாவுக்குக் காரணமான கணவன் மற்றும் அவரது தந்தையை கைது செய்யக்கோரி பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நீதிகேட்டு தர்ணா போராட்டம்.


திருப்பூர்: மகளின் சாவுக்கு நீதி கேட்டு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் காலில் விழுந்து கெஞ்சிய பெற்றோர் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் புதுக்காலனி நவக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி பொன்னம்மாள். இவர்களுக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். இவர் கடந்த 5-ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச்சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பிரபு என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2- குழந்தைகளும் உள்ளனர்.

இந்தநிலையில் பிரபு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். மேலும் பிரபுவின் தந்தை ஆறுமுகம் நந்தினிக்கு பாலியல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நந்தினி கணவரிடம் கூறியபோது அவர் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.

இதுதொடர்பாக நந்தினி பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் இதுதொடர்பாக ஆறுமுகத்திடம் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் நந்தினியின் நடத்தை குறித்து மகனிடம் தவறாகக் கூறி அவர்களுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளார்.

இந்தநிலையில் கடந்த 30-ந்தேதி இரவு நந்தினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகப் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் நந்தினியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்குச் சென்று பார்த்தபோது ரத்த காயங்களுடன் நந்தினி பிணமாகக் கிடந்துள்ளார்.

இதுகுறித்து குன்னத்தூர் போலீசில் மகள் சாவில் மர்மம் இருப்பதாக நந்தினி பெற்றோர் புகார் செய்துள்ளனர். காவல்துறை தற்கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் ஆர்.டிஒ. விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் மகளின் சாவுக்குக் காரணமான பிரபு மற்றும் அவரது தந்தை ஆறுமுகத்தைக் கைது செய்யக்கோரி பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நந்தினியின் சாவுக்கு நீதிகேட்டும் சாவுக்குக் காரணமானவர்களைக் கைது செய்யக்கோரியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்து பேச்சுவார்த்தையில், ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறை காலில் விழுந்து கெஞ்சியதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அதிகாரிகள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...