ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனையொட்டி, வால்பாறையில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் இன்று அன்னாபிஷேக விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் இன்று அன்னாபிஷேக விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சந்திரன் பூமிக்கு மிக அருகில் முழு ஒளியையும் பூமியில் வீச செய்யும் தினம். அந்த ஒளி ஆற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். இதனை முன்னிட்டு வால்பாறையில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. லிங்கத் திருமேனியாக இருக்கும் காசிவிஸ்வநாதருக்கு அன்னத்தால் அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டது.

இறைவனுக்கு அபிஷேகம் செய்து இறைவனின் திருமேனியை மூடும் அளவிற்கு அன்னம் சாத்தப்பட்டது. தொடர்ந்து பழங்கள் காய்கறிகள் இனிப்புகள் வகைகளால் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க இறைவனுக்குத் தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காலத்திற்குப் பின் இன்று தான் முதல் முறையாக இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து கலந்து கொண்டு இறைவனைத் தரிசித்தனர்.