கோவை மாநகராட்சி (தெற்கு) பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயர் அழிக்கப்பட்டதால் பரபரப்பு

குளத்துப்பாளையம் பகுதியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். ஆனால், இன்று பெயர் பலகையில் அவர் பெயர் அழிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகத்தில் உள்ள சமூக ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயர் அழிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் அடையாளங்களை அழித்து, போலியாக திமுகவினர் தங்களை அடையாளப்படுத்த முயற்ச்சி செய்வதாக கோவை அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், கோவை குளத்துபாளையம் பகுதியில் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். ஆனால், இன்று அந்த அலுவலகத்தின் முன்பு அமைச்சரின் பெயர் எழுதப்பட்டு இருந்த திறப்பு விழா தகவல்களையும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயரும் அழிக்கப்பட்டுள்ளதாக, அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.



கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்குச் சென்று மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு, மக்களின் நலன் கருதி இந்த சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதாகவும், அங்கு மக்கள் இரத்த அழுத்தம், சக்கரை நோய் போன்றவற்றுக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்தனர்.



பெயர் பலகையில் தகவல்கள் அழிக்கப்பட்டதால், அப்பகுதியில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கூடியதால், அங்கு வந்த காவல்துறையினர், கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து, அதிமுகவினர் வழக்கறிஞர்களுடன் சென்று கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன் மீது கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் குறித்து புகார் அளித்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...