கோவையில் கனமழை எதிரொலி: கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து- உயிர்தப்பிய பக்தர்கள்.!!

கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திடீரென கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தரைமட்டமானது. சுவர் இடிந்து விழும் பொழுது அந்த பகுதிகள் பக்தர்கள் இல்லாத காரணத்தினால் அதிர்ஷ்டவசமாகக் காயம் மற்றும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.



கோவை: கோவை கணபதி பகுதியில் உள்ள உள்ள ஒரு கோவிலில் சுற்றுச்சுவர் தொடர் மழை காரணமாக திடீரென இடிந்து விழுந்ததில், பக்தர்கள் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

கோவை கணபதி, கட்டபொம்மன் வீதியில், கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் கடந்த 30-வருடத்திற்கு மேலாக அதே பகுதியில் கருப்பராயன் கோவில் உருவாகி சுற்றுச்சுவர் எழுப்பி மரத்திற்கு அடியில் தொடர்ந்து பூஜைகள் அபிஷேகங்கள் செய்து வழிபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில், கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தரைமட்டமானது.



சுவர் இடிந்து விழும் பொழுது அந்த பகுதிகள் பக்தர்கள் இல்லாத காரணத்தினால் அதிர்ஷ்டவசமாகக் காயம் மற்றும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது:-

நாங்கள் பல ஆண்டுகளாக கருப்பராயன் கோயிலைப் பாதுகாத்து வணங்கி வருகிறோம். இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு எங்களுக்குச் சிறந்த ஒரு கோவிலை உருவாக்கித் தர வேண்டும். ஒரு பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

அடுத்த பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் விழுவதற்குத் தயாராக உள்ளது. அதை மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு அப்புறப்படுத்தி எங்களுக்கு விரைவில் பாதுகாப்பான சுற்றுச்சூழல் கூடிய கோயில் உருவாக்கித் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...