வால்பாறையில் நியாய விலை கடையை உடைத்து சேதப்படுத்திய காட்டுயானைகள்.!!

வால்பாறை அருகே காட்டுயானைகள் நியாய விலை கடையை உடைத்து சேதப்படுத்தியதால், பொது மக்கள் அச்சம். காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை.


வால்பாறை: வால்பாறை அருகே காட்டுயானைகள் நியாய விலை கடையை உடைத்து சேதப்படுத்தியதால், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.



வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட் பகுதியில் நேற்று இரவு சுமார் ஒரு மணி அளவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள நியாய விலை கடையை ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளிருந்த அரிசி கோதுமை பருப்பு சர்க்கரை போன்றவை களை வெளியே எடுத்துப் போட்டு தின்று கடையை உடைத்து சேதப்படுத்தியது.



காட்டுயானைகளை வனத்துறையினரும் எஸ்டேட் பொதுமக்களும் அப்பகுதியிலிருந்து பட்டாசு வெடித்து சத்தம் போட்டு அப்பகுதியிலிருந்து விரட்டினர்.



காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...