கிணத்துக்கடவு அரசு பள்ளி கொடிக்கம்பத்தில் வாளியை தொங்கவிட்ட மர்ம நபர்கள்.!!

கிணத்துக்கடவு அருகே கோடங்கி பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள கொடிக்கம்பத்தில் தகர வாளியை ஏற்றி சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே கோடங்கி பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள கொடிக்கம்பத்தில் தகர வாளியை ஏற்றி சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கி பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளி திறக்கப்படாமல் பராமரிப்பு பணிகள் மட்டும் நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் உள்ள தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தில் சமூக விரோதிகள் தகர வாளியை ஏற்றி இருப்பதும், பள்ளி சுவரில் உள்ள அறிவிப்புப் பலகையில் சேற்றை பூசி அட்டகாசம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமை ஆசிரியர் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்ததை அடுத்து ஊராட்சி நிர்வாகம் தண்டோரா மூலம் இனிமேல் அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

ஆனால் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற கிணத்துக்கடவு காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...