கோவையில் ராணுவ வீரர் என கூறி ஆன்லைன் மூலமாக கார் விற்பனை: டிரைவரிடம் 1-லட்சம் மோசடி.!!

கோவையில் கார் விற்பனை செய்வதாக கூறி ரூ.1-லட்சம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ராணுவ வீரர் என கூறி கைவரிசை காட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கார் விற்பனை செய்வதாக கூறி ரூ.1-லட்சம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ராணுவ வீரர் என கூறி கைவரிசை காட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த டேவிட் ஜான் வயது 26, டிரைவர். இவர் சொந்தமாக பயன்படுத்தப்பட்ட கார் வாங்க திட்டமிட்டார். இதற்காக ஓ.எல்.எக்ஸ் ஆப் பை பதிவிறக்கம் செய்து தன்னிடம் உள்ள பணத்திற்கு ஏற்ற வகையில் கார் உள்ளதா? எனப் பார்த்தார். அப்போது அதில் ஒருவர் தான் ராணுவ வீரர் என்றும் தான் வேறு ஊருக்கு மாற்றலாகி செல்வதால் தன்னுடைய காரை விற்பனை செய்வதாக பதிவிட்டு இருந்தார்.

இதனை அடுத்து டேவிட் ஜான் அதில் உள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய நபர் தன்னிடம் நிறைய பேர் கார் கேட்டுள்ளதாகவும் உங்களுக்கு கார் வேண்டும் என்றால் உடனடியாக G-pay மூலமாக முன்பணம் ரூபாய் 99-ஆயிரத்து 400-அனுப்பி வைக்குமாறு கூறினார்.

குறைந்த விலையில் கார் கிடைப்பதால் ராணுவ வீரர் என அவர் கூறியதால் நம்பிக்கை அடைந்த டேவிட் ஜான் உடனடியாக பணத்தை அந்த நபருக்கு அனுப்பி வைத்தார். சிறிது நேரத்திற்குப் பின்னர் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டேவிட் ஜான் இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரர் என கூறி ஏமாற்றிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...