கோவையில் மேற்கு மற்றும்‌ வடக்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு.!!

கோவை மாநகராட்சி மேற்கு மற்றும்‌ வடக்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்குத் தடையின்றி குடிநீர்‌ வழங்கிடத் தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மற்றும்‌ வடக்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ 10-வது வார்டுக்குட்பட்ட மேட்டுப்பாளையம்‌ பேருந்து நிலையத்தில்‌ முன் களப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌‌, முன் களப்பணியாளர்கள்‌ வீடு வீடாகச்‌ சென்று சளி, காய்ச்சல்‌, இருமல்‌ போன்ற அறிகுறி உள்ளவர்களைக்‌ கண்டறியும் போது, வீட்டிலுள்ள அனைவரும்‌ பரிசோதனை செய்ய வேண்டும்‌.

பரிசோதனையின்‌ விபரங்களை கோவிட்‌-19 கள ஆய்வுப்‌ பதிவேடுகளில்‌ பதிவு செய்திட வேண்டும்‌. தங்களுடைய பணிகளைச் சிறப்பாகச் செய்திட வேண்டும்‌. களப்பணி மேற்கொள்ளும்போது முகக்கவசம்‌ அணிந்தும்‌, கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும்‌, மேலும்‌, கொசுவினால்‌ ஏற்படும்‌ டெங்கு போன்ற நோய்களைத் தடுப்பதற்காகப் பொதுமக்களிடம்‌ வீடுகளில்‌ உபயோகமற்ற பொருட்கள்‌, பயனற்ற பிளாஸ்டிக்‌ பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்‌.

வீடுகளில்‌ உள்ள தண்ணீர்‌ தொட்டிகளைக் கொசுக்கள்‌ புகா வண்ணம்‌ மூடி வைக்க வேண்டும்‌. மேலும்‌ வருகின்ற சனிக்கிழமை 23.10.2021 அன்று நடைபெறவுள்ள மெகா கொரோனா தடுப்பூசி முகாமில்‌ தடுப்பூசி போடாத பொதுமக்கள்‌ தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்‌ என தெரிவித்தார்‌.



மேலும்‌, ஜீவா நகா்‌ பகுதியில்‌ ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுப் பணி திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.5.2 கோடி மதிப்பீட்டில்‌ கழிவுநீர்‌ வடிகால்‌ தலா 830-மீட்டர்‌ வலது மற்றும்‌ இடது பக்கமும்‌ கழிவு நீர்‌ வடிகால்‌ கட்டும்‌ பணிகளில்‌ தற்போது 130-மீட்டர் கழிவு நீர்‌ வடிகால்‌ கட்டும்‌ பணிகள்‌ முடிக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து, பருவமழை காரணமாக மழைநீர்‌ தேங்காவண்ணம்‌, மீதமுள்ள சுமார்‌ 700 மீட்டர் கழிவு நீர் வடிகால்‌ கட்டும்‌ பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்கவேண்டுமெனவும்‌, பின்னர்‌ ரூ.1.80 கோடி மதிப்பீட்டில்‌ 920-மீட்டர் தொலைவிற்குத் தார்ச்சாலை அமைக்க வேண்டும்‌ எனச் சம்பந்தப்பட்ட மாநகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌, ஜெய்‌ நகரில்‌ மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின்‌ மூலமாக கவுண்டம்பாளையம்‌, வடவள்ளி, வீரகேரளம்‌ கூட்டுக்குடிநீர்‌ திட்ட பிரதான குடிநீர் குழாய்க்குத் தண்ணீர் வரும்‌ பாதையில்‌ நீர்க்கசிவு ஏற்பட்டு நீர்‌ வெளியேறுவதைப் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்‌‌ நீர்க்கசிவு ஏற்படுவதை உடனடியாக சரி செய்து, பொதுமக்களுக்குத் தடையின்றி குடிநீர்‌ வழங்கிடத் தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவிட்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலத்தில்‌ நடைபெற்ற சிறப்பு மக்கள்‌ குறைதீர்க்கும்‌ முகாமில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கராவிடம் பொதுமக்கள்‌ கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையாளர்‌ சிவசுப்பிரமணியம்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவிப் பொறியாளர்‌ உத்தமன்‌, இளம் பொறியாளர்‌ ராஜேஸ்‌ வேணுகோபால்‌, மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...