தாராபுரம் அருகே 100-நாள் வேலையின் போது தேனீக்கள் கொட்டியதில் 20-பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை.!!

தாராபுரம் அருகே 100-நாள் வேலையின் போது தேனீக்கள் கொட்டியதில் 20-பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தேனீக்கள் கடித்த நபர்களை நேரில் சென்று பார்வையிட்டார்.


திருப்பூர்: தாராபுரம் அருகே 100-நாள் வேலையின் போது தேனீக்கள் கொட்டியதில் 20-பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தேனீக்கள் கடித்த நபர்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள மணக்கடவு பகுதியில் 100-நாள் வேலையில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளர்களை விஷ தேனீக்கள் துரத்தித் துரத்தி கொட்டியது மாரியம்மாள் அழகுமுத்து மருதாயி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.



தேனீக்கள் கொட்டியதால் சிலருக்கு தலைச்சுற்று வாந்தி மயக்கம் வந்தது. இதனால் தேனீக்கள் கொட்டிய 100- நாள் வேலை தொழிலாளர்களை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதில் பலருக்கு கைகள், முகம், கண்கள், முதுகு போன்ற பகுதியில் தேனீக்கள் கொட்டியதில் வீக்கம் ஏற்பட்டு வலியால் அவதியடைந்தனர்.



இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று தேனீக்கள் கொட்டிய தொழிலாளர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து தலைமை மருத்துவர் சிவபாலன் இடம் தேனீக்கள் கொட்டிய தொழிலாளர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...