திருப்பூரில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக சட்ட விழிப்புணர்வு.!!

அனைத்து தாலுகா நீதிமன்றங்களுக்கும் சட்ட விழிப்புணர்வு வாகனம் சென்று பொதுமக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாக சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பாகச் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி இன்று துவக்கி வைத்தார்.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடப்பட்டு வரக் கூடிய சூழ்நிலையில், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பாக பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு பொது மக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை இன்று மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.



ஒவ்வொரு நாளாகத் திருப்பூரில் உள்ள அனைத்து தாலுகா நீதிமன்றங்களுக்கும் சட்ட விழிப்புணர்வு வாகனம் சென்று பொதுமக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாக சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்து.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...