பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் மீதும் இந்துக்கள் மீதும் தாக்குதல்.!!

பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதும் இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகின்றது என புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில்,

பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதும் இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகின்றது என தெரிவித்தார். குறிப்பாக பங்களாதேஷ் நாட்டில் இந்து மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து இருப்பதாகத் தெரிவித்த அவர், பங்களாதேஷ் 1947-வரை இந்தியாவின் அங்கமாக இருந்த பகுதி எனவும், அதன் பின்பு 1971-க்கு பின்பு பாகிஸ்தானிலிருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்தது என தெரிவித்தார்.



பங்களாதேஷ் நாட்டில் 60-ஆண்டுகளுக்கு மேலாக இந்துகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடப்பதும் இடம் பெயர்வதும் தொடர்கின்றது எனவும், 28-சதவீதமாகக் இருந்த இந்துக்களின் எண்ணிக்கை தற்போது 8-சதவீதமாக குறைந்துள்ளது எனவும் தெரிவித்தார். அங்கு இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் கவலை அளிக்கக் கூடியதும் கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் ஐ.நா இதில் தலையிட வேண்டும் என வலியுறுத்தி வரும் 27-ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி ஒருமித்த கருத்துடைய அனைத்து இயக்கங்களையும் ஒன்று சேர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச அரசியல் குறித்து மட்டும் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமியிடம், திமுக தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகள், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது. அவற்றுக்குப் பதில் அளிக்க மறுத்த டாக்டர்.கிருஷ்ணசாமி, பங்களாதேஷ் விவகாரம் முக்கியமானது எனவும் மனித உரிமை தொடர்பானது என கூறிய அவர், இந்த விவகாரத்திற்கு வடமாநில ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தமிழக ஊடகங்கள் கொடுக்க வில்லை எனவும் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...