அய்யர்பாடி எஸ்டேட்டில் கரடிகள் நடமாட்டம்: அச்சத்தில் தோட்டத் தொழிலாளர்கள்.!!

வால்பாறை, அய்யர்பாடி எஸ்டேட்டில் மீண்டும் கரடி நடமாடியதை கண்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். வனத் துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வால்பாறை: வால்பாறை, அய்யர்பாடி எஸ்டேட்டில் மீண்டும் கரடி நடமாடியதை கண்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

வால்பாறையில் யானைகள், சிறுத்தைகள் நடமாட்டத்தைத் தொடர்ந்து, தற்போது கரடிகள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது.தேயிலைத் தோட்டங்களில் பதுங்கியிருக்கும் கரடிகள் தொழிலாளர்களைத் தாக்குவதுடன், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

இதனால் அச்சத்துடன் வேலைக்குச் சென்று வருகின்றனர். வால்பாறை அய்யர்பாடி துணை மின் நிலையம் அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு தாய்கரடி, இரண்டு குட்டிகளுடன் நடமாடியதைக் கண்ட தொழிலாளர்கள் வனத் துறையினருக்குத்தகவல் தெரிவித்தனர்.

அப்பகுதியில் நடமாடும் கரடிகளை வனத் துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டு சென்றுவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...