பெண்ணிடம் 1.5 மோசடி செய்த வழக்கில் தி.மு.க பிரமுகர் கோவை தங்கம் மருமகன் கைது.!!

தி.மு.க பிரமுகர் கோவை தங்கம் மருமகன் அருண்பிரகாஷ் தன்னை தாக்கியதாக சிந்துஜா அளித்த புகாரின் பேரில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அருண்பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவையைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.1.5 கோடி மோசடி செய்த வழக்கில் தி.மு.க பிரமுகர் கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

காளப்பட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் சிந்துஜா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளி த்தார்.

அதன்படி, முன்னாள் எம்.எல்.ஏ.,வும் திமுக., பிரமுகரின் கோவை தங்கம் மருமகனுமான அருண் பிரகாஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி, ரூ.7-கோடி பணம் பறித்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும், கோவை தங்கம் தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் அருண் பிரகாஷ் உட்பட 3-பேர் மீது கோவை கிழக்கு மகளிர் காவல் நிலையத்தில் 3-பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பிரமுகர் கோவை தங்கம் தான் அந்த பெண்ணை பார்த்தது கூட கிடையாது என்று கூறினார்.

மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் தன் மீது அவதூறு பரப்புவதற்காக அந்த பெண்ணை தூண்டி விட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த சூழலில் சாய்பாபா காலனியை சேர்ந்த கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் (41) சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவன் என்பவரிடம் ரூ.1.5 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஐ.பி.சி 420-பிரிவின் கீழ் மோசடி வழக்குப்பதிவு செய்த கோவை குற்றப்பிரிவு போலீசார், அருண் பிரகாஷ் இன்று கைது செய்துள்ளனர்.

முன்னதாக அருண்பிரகாஷ் தன்னை தாக்கியதாக சிந்துஜா அளித்த புகாரின் பேரில் அருண்பிரகாஷ் மீது கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஜாமீனில் வெளியே வந்த அவர் தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...