கிணத்துக்கடவில் திமுக கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்.!!

திமுக கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை வழங்கி உறுப்பினர்களாக சேர்ந்தனர்.


கோவை: கிணத்துக்கடவில் திமுக கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் திமுக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கிளை அலுவலகம் பொள்ளாச்சி சாலையில் உள்ள மாடர்ன் பிரஸில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கிளை அலுவலகத்தில் இன்று நல வாரியங்களுக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை வழங்கி உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.

இந்த முகாமில் கோவை மாவட்ட திமுக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்றச் சங்க பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி, அலுவலகப் பொறுப்பாளர் பகலவன், கிணத்துக்கடவு தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழ்பித்தன், கிணவை கணேசன், மிசா சிவசாமி, கே.ஜே. லட்சுமணன், டேவிட், மணிகண்டன், அண்ணாநகர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...