கோவையில் நகை திருடி சிறைக்கு சென்று ஜாமீனில் வந்தவர் மீண்டும் நகை திருடி கைது.!!

கடந்த மாதம் 15-ந் தேதி செல்வபுரத்தில் ஒரு வீட்டில் 20-பவுன் நகையை திருடி கைது செய்யப்பட்டு சிறை சென்று கடந்த வாரத்தில் ஜாமீனில் வெளியே வந்ததும், மீண்டும் தற்போது நகை திருடியது தெரிய வந்தது.


கோவை: நகை திருட்டு வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வந்து நகை திருடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் பொருட்கள் மீட்கப்பட்டன.

தீபாவளி பண்டிகையொட்டி கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட இடங்களில் பொது மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்த கூட்டத்தைப் பயன்படுத்தி நகை, பணம் திருடுபவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த தனிப்படையைச் சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் தலைமைக் காவலர்கள் உமா, கார்த்திக், பூபதி ஆகியோர் கோவை ராஜவீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்தார். அத்துடன் அவர் வைத்திருந்த பையில் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தன.

இதனால் போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் (28) என்பதும் செல்வபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் திருடிய நகை மற்றும் வெள்ளி பொருட்களை விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மீட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், செல்வராஜ் கடந்த மாதம் 15-ந் தேதி செல்வபுரத்தில் ஒரு வீட்டில் 20 பவுன் நகையை திருடி கைது செய்யப்பட்டு சிறை சென்று கடந்த வாரத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்ததும், அதன் பின்னர், மீண்டும் தற்போது நகை திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...