நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 27-ம் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 27-ம் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகையியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய மாணவர் சங்கம் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பில் கூறியதாவது:-

பாஜக அரசின் கல்வி தாக்குதல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. நீட் தேர்வு காரணமாக 22 மாணவர்கள் உயிரிழந்து உள்ளனர். தமிழக அரசு நீட் விலக்கு சட்ட மசோதா இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்காகக் காத்து இருப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுக் கிடப்பில் போடப்பட்டதாகவும் இப்போதும் ஆளுநர் சட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்காமல் கையெழுத்திடாமல் இருப்பதன் உள்நோக்கம் என்ன என்பது தெரியவில்லை என்றார்.
தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு தொடர்ச்சியாக உடைக்கப்படுவதாகவும் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிக்கப்படுவதால் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றார்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க மத்தியக் குழு அக்டோபர் 27-ம் தேதி இந்தியா முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தமிழகத்தில் ஆளுநர் மாளிகையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தார்.
மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒட்டுமொத்தமாகக் கல்வித் துறையை மோசமான நிகழ்வுகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியவர் ஒன்றிய அரசின் தேசிய கொள்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

3,8,5-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகள் வைக்கப்பட வேண்டும் என்பதை மாற்றி வினாடி-வினா என்ற தேசிய கொள்கையையும் அனுமதிக்க முடியாது என்றார். இல்லங்களுக்குக் கல்வியைக் கொண்டு செல்லும் விதமாக மக்கள் கல்வி என்ற பெயரில் 200-கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு நவம்பரில் பள்ளிகள் துவக்கப்படும் என்ற தேசிய கொள்கையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்தார்.
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகத் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது எனவும் தமிழகத்திற்கு எனத் தனியாகக் கல்விக் கொள்கையை வகுக்க வேண்டும் என்றார். அரசு கல்லூரிகள் துவங்கப்பட்டாலும் ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர் எனவும் கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட 10-கல்லூரிகளில் தற்போது வரை ஒரு துறைக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதாகவும் தற்போது வரை அதே நிலை தொடர்வதாகக் கூறிய அவர் தமிழகத்தில் 35- கல்லூரிகளில் முதல்வர்களே இல்லாத நிலை தொடர்வதாகத் தெரிவித்தார்.
153-அரசு கல்லூரிகளில் 7000-ஆசிரியர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக நியமனம் செய்யப்படாமல் உள்ளதாகத் தெரிவித்தவர் அரசுக் கல்வி நிறுவனங்களைப் பாதுகாக்க அரசு உடனடியாக முன் வரவேண்டும் எனவும் தேசிய கல்விக் கொள்கையை வேறு ஒரு பெயரில் செயல் பட முயல்வதை இந்திய மாணவர் சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது எனத் தெரிவித்தார்.