திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி போடப்பட்டிருந்த சாலையோர கடைகள் அகற்றம்..!

மீண்டும் சாலையோரத்தில் கடைகள் வைத்தால் கடும் நடவடிக்கை என்று மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தை அருகே மற்றும் திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி போடப்பட்டிருந்த சாலையோர கடைகள் அகற்றப்பட்டது.

தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பொருட்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் உழவர் சந்தை திட்டத்தை அமல்படுத்தினார்.

இதன்படி விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை உழவர் சந்தையில் தாங்களே விற்பனை செய்து கொள்ளலாம் இடைத்தரகர்கள் தலையீடு இருக்காது. இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் 120 கடைகள் செயல்பட்டு வருகிறது இருப்பினும் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இங்கு வியாபாரம் செய்ய பதிவு செய்துள்ளனர்.

ஆனால், சமீபகாலமாக உழவர் சந்தைக்கு வெளியிலேயும் திருப்பூர் பல்லடம் சாலையோரத்திலும் வியாபாரிகள் காய்கறி கடைகள் அமைத்து விற்பனை செய்து வந்தனர். இதன் காரணமாக விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதுமட்டுமின்றி சாலையோர கடைகளால் தென்னம்பாளையம் பகுதியில் அதிகாலை முதலே கடும் போக்குவரத்து நெரிசலும் இருந்து வந்தது.

எனவே, சாலையோரக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் உத்தரவின் பேரில் அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட சாலையோர கடைகளை அப்புறப்படுத்தினர். மேலும் இனிமேல் சாலையோர கடைகள் அமைக்கக் கூடாது என ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பும் விடுத்தனர்.



பின்னர், சாலையோர கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதை மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சாலையோர கடைகள் அனைத்தும் தற்போது அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மாநகராட்சி உத்தரவை மீறி மீண்டும் சாலையோர கடைகள் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...