வால்பாறையில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஏஐடியூசி மாநில செயற்குழு கூட்டம்..!

இந்த கூட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம், 8 மணி நேரம் வேலை, பணி பாதுகாப்பு, அரசு பணியாளர்களுக்கு நிகரான சம்பளம் தர கோரிக்கை வைக்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் AITUC மாநில செயற்குழு கூட்டம் தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறையில் AITUC தொழிற்சங்கம் சார்பாக தமிழ் நாடு டாஸ்மாக் பணியாளர்கள் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் பெரியசாமி தலைமையில் மாநில பொதுச் செயலாளர் தனசேகரன் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு டாஸ்மாக் மாநில செயற் கூட்டம் வால்பாறையில் நடைபெற்றது.

முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்ட துளசி தாஷ் அவர்கள் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து மாநில தலைவர் பணியாளர்களின் ஒற்றுமை குறித்து பேசினார். தமிழ் நாட்டில் அரசு டாஸ்மாக்கில் வேலை செய்யும் சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம், 8 மணி நேரம் வேலை, பணி பாதுகாப்பு, அரசு பணியாளர்களுக்கு நிகரான சம்பளம் தர அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.



இந்த செயற்குழு கூட்டத்தில் மாநிலத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சரவண குமார் பொள்ளாச்சி, மணிகண்டன் பொள்ளாச்சி, சுந்தர் பொள்ளாச்சி, p.சக்தி திருவண்ணாமலை, வரதராஜன் மாவட்ட செயலாளர் திருவண்ணாமலை, பாண்டியன் மாவட்ட பொறுள்ளர் AITUC, வால்பாறை AITUC கட்சியினர் மோகன் முனியாண்டி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.



இதனிடையே, வரும் நவம்பர் 29ம் தேதி காலை தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு கடை திறக்கும் முன் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...