ராம மோகன ராவ் வீட்டில் சோதனை முடிந்தது; மகனிடம் விசாரணை


தமிழக அரசின் தலைமை செயலர் ராம மோகன ராவ், வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை முடிந்தது; அதிகாரிகள் சோதனையை முடித்து புறப்பட்டனர்.

ரெய்டு :

தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன ராவ், 58, வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று அதிகாலை முதல் அதிரடி ரெய்டு நடத்தினர். அவரது வீடு மற்றும் கோட்டையில் உள்ள அவரது அலுவலகம் உட்பட, 12 இடங்களில், அதிரடியாக சோதனை நடந்தது. இச்சோதனையின் போது, பாதுகாப்பு பணியில், துணை ராணுவம் ஈடுபட்டது. 

அதிகாரிகள் புறப்பட்டனர் :

அண்ணாநகரிலுள்ள ராவ் வீட்டில் விடிய விடிய சோதனை தொடர்ந்தது. வருமான வரித்துறை உயரதிகாரிகள் இன்று அதிகாலையில் வந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ராவ் வீட்டில் 24 மணி நேரமாக நடந்த சோதனையை முடித்துக் கொண்டு அதிகாரிகள் புறப்பட்டனர். தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் புறப்பட்டு சென்றனர். ரெய்டில் சிக்கிய ஆவணங்களை அதிகாரிகள் உடன் எடுத்து சென்றனர்.

5 இடங்களில் சோதனை நிறைவு :

ராவ் வீடு, மகன் விவேக் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நிறைவடைந்தது. மற்ற 8 இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ராவ் மகன் விவேக்கை, விசாரணைக்காக திருவான்மியூர் வீட்டிலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். நந்தனத்திலுள்ள மகன் அலுவலகத்தில் விசாரணை நடைபெறுகிறது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...