கோவையில் கல்லால் தாக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி சாவு.!!

கல்லால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.


கோவை: கல்லால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை காட்டூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ராம்நகர் அன்சாரி வீதி பகுதியில் பிளாட்பாரத்தில் ராஜன் 50, என்பவர் தங்கியிருந்தார்.

இவர் குப்பை பொறுக்கி விற்று தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் தனது வேலையை முடித்துவிட்டு வழக்கம் போல் தான் வழக்கமாக படுத்து தூங்க கூடிய இடத்திற்குச் சென்று சாலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த நிலையில் மறுநாள் காலை அவர் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து காட்டூர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்து ராஜனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதுதொடர்பாக காட்டூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ராஜன் அருகிலேயே தந்தை மகன் 2-பேர் தங்கி இருந்துள்ளனர். 2-பேரும் மது குடிப்பதற்காக ராஜனிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறி தர மறுத்துவிட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2-பேரும் சேர்ந்து அருகே கிடந்த கல்லை எடுத்து அவரை தாக்கிக் கொன்றது தெரியவந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜம் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதையடுத்து, காட்டூர் காவல்துறை கொலை முயற்சி வழக்கைக் கொலை வழக்காக மாற்றி விசாரணை செய்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...