தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை பாதுகாப்புக் குழுக்களை வலுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டமும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.
கோவை: தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் குழந்தை பாதுகாப்பு குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை பாதுகாப்புக் குழுக்களை வலுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டமும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மருத்துவர் மல்லிகை செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
செய்தியாளரிடம் பேசிய ஆணைய உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்ததாவது:-
குழந்தைகள் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் வலியுறுத்தல்.
தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்த 2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற குற்றங்கள் குறித்த புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குழந்தைகள் குற்ற செயலில் ஈடுபட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன.
இந்த அறிக்கையின்படி, கோயம்புத்தூர் ஊரக பகுதிகளிலும் மாநகராட்சி பகுதியிலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 188-கடந்த ஆண்டில் பதிவாகியுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டப்படி (போக்சோ) 133-வழக்குகள் இவற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தியத் தண்டனைச் சட்டப்படி 47-வழக்குகளும் மற்ற சட்டங்களின்படி 8-வழக்குகளும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி கோயம்புத்தூர் ஊரக பகுதிகளிலும் மாநகராட்சி பகுதியிலும் 36-செயல்களின் குழந்தைகள் ஈடுபட்டுள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் குழந்தைகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இவை இரண்டுமே குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் உரிமைகளுக்கும் எதிரானவகைகளாகும்.
குழந்தைகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சட்டத்திற்கு முரணானவர்களாக மாறுவதைத் தடுக்க குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், சமூக அக்கறை கொண்டவர்கள் மற்றும் சட்டத்தை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் உள்ளிட்டோர் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமான கலாச்சாரத்தை ஊக்குவிக்க தங்களால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும். பள்ளிகளில் அறநெறி வகுப்புக்கள் கட்டாயமாக்கப்பட்டு முழுமையாகச் சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒழுக்க நெறிகள் போதிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை அரசாணை எண் 30 & 31 படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆறுவகையான குழந்தை பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுச் செயல்பட வேண்டும். நகர்ப்புறங்களில் மாநகராட்சி மண்டல அளவிலும், நகராட்சி அளவிலும், பேரூராட்சி அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுச் செயல்பட வேண்டும்.
இதைப்போலவே ஊரகப் பகுதிகளில் மாவட்ட குழந்தை பாதுகாப்புக் குழு, வட்டார குழந்தை பாதுகாப்புக் குழுக்களும் கிராம அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுச் செயல்பட வேண்டும். இத்தகைய குழுக்களை வலுப்படுத்தினால் குழந்தைகளின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்த முடியும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்புக் குழுக்களை வலுப்படுத்தத் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுபாஷினி, மாநகர துணை காவல் ஆணையர் சிலம்பரசன் உள்ளிட்ட்பல துறை அதிகாரிகள் கலத்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சுந்தர் செய்திருந்தார்.
020-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்(Crimes against children In the year-2020)
Coimbatore Rural
Cases under POCSO Act, 2012: 64
Cases under Indian Penal Code: 5
Cases under other laws: 8
Total: 77
Coimbatore City
Cases under POCSO Act, 2012: 69
Cases under Indian Penal Code:42
Cases under other laws: 0
Total: 111
Coimbatore Rural & city
Cases under POCSO Act, 2012: 133
Cases under Indian Penal Code:47
Cases under other laws: 8
Total: 188
Crimes by the Juvenile
In the year 2020
Coimbatore Rural
Cases under Indian Penal Code: 7
Cases under other laws: 2
Total: 9
Coimbatore City
Cases under Indian Penal Code:26
Cases under other laws: 1
Total: 27
Coimbatore Rural & city
Cases under Indian Penal Code:33
Cases under other laws: 3
Total: 36
Source: National Crime Records Bureau