பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா கைது நடவடிக்கையில் அரசு தாமதம் செய்யாது -அமைச்சர் ரகுபதி.!!

ஹெச்.ராஜா மீது அவதூறு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் இதுவரை கைது செய்யப்படாதது குறித்த கேள்விக்குப் பதில், அளித்த அமைச்சர் ஹெச் ராஜா கைது நடவடிக்கையில் அரசு தாமதம் செய்யாது என சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.


கோவை: பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா கைது நடவடிக்கையில் அரசு தாமதம் செய்யாது சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், பத்திரிகையாளர்களிடம் கூறியது:-



சிறைச்சாலை என்பது தவறு செய்தவர்கள் திருந்தி வாழ்வதற்கான இடமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது என தெரிவித்தார்.

சிறைக்கு வருபவர்களுக்கு அனைத்து வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு சிறையிலிருந்து வெளியில் செல்கையில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருவாய் ஈட்டும் வகையில் அமைந்துள்ளது என தெரிவித்த அவர் 10-ஆண்டுகளாகச் சிறையில் உள்ளவர்கள் முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், விரைவில் தகுதியான நபர்கள் விடுதலை செய்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் என்றார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் விடுதலை தொடர்பான கேள்விக்குத் தமிழக முதல்வர் 7-பேர் விடுதலையில் அக்கறை கொண்டு முழு முயற்சி எடுத்து வருவதாகக் கூறினார்.

கோவை மத்திய சிறைச்சாலை இட மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு முன்னால் முதல்வர் கருணாநிதி இங்குச் செம்மொழி பூங்கா அமையும் எனத் தெரிவித்து இருந்தார் எனவும் இட மாற்றம் குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு முதல்வரின் முடிவுக்கு விடப்பட்டு உள்ளது.

தமிழக சிறைகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு நவீன மயமாக்கப்பட வேண்டும் என்பது முதல்வரின் எண்ணம் எனவும், திறந்த வெளி சிறைச்சாலைகள் அமைக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம் என்றும் அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றார்.

மத்திய சிறைச்சாலை மாற்றப்படும் பட்சத்தில் இந்த இடத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் எனவும் புதிய சிறைச்சாலை அமைந்திட இடம் கிடைப்பது கடினம் என்பதால் செம்மொழி பூங்காவிற்காக இந்த இடம் மாற்றப்படாது என்றார்.

எல்லா மத்திய சிறைச்சாலையில் திறந்த வெளி சிறைச்சாலை உருவாக்கிட வேண்டும் என்பது அரசின் நோக்கம் எனவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

எட்டு பத்து மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் எழுத சிறைவாசிகளா அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் உரிய பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர் கல்லூரி படிப்புகளுக்குத் தேவையான பயிற்சிகள் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

14-ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சிறைவாசிகளுக்கு 10 ஆண்டுகள் நிறைவு அடைந்த நிலையில் நன்னடத்தை காரணமாக விடுவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் நிபந்தனைக்கு உட்பட்டு மற்ற கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அரசு மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

அனைவருக்கும் பொதுவான முதல்வராக ஸ்டாலின் செயல்படுவதாகக் கூறியவர் Prison Bazaarன் உற்பத்தி கொரோனா காலகட்டத்தில் குறைந்ததாகவும் தற்போது அதிகரித்து உள்ளது எனவும் கூறிய அவர், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகளில் சோதனை நடைபெறுவதைக் குறித்த கேள்விக்கு அது அரசின் முடிவு எனவும் அது குறித்துத் தான் பதில் அளிக்க முடியாது என்றார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா மீது அவதூறு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் இதுவரை கைது செய்யப்படாதது குறித்த கேள்விக்குப் பதில், அளித்த அமைச்சர் பிணையில் வர முடியாத பிடிவாரண்டை நீதிமன்ற உத்தரவு காவல்துறைக்குக் கிடைக்கப் பெற வேண்டும் எனவும் ஹெச் ராஜா கைது நடவடிக்கையில் அரசு தாமதம் செய்யாது எனச் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...