பழ கமிஷன் மண்டியை இடம் மாற்ற கோரி மனு–உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் வாக்குறுதி.!!

கோயம்புத்தூர் புரூட்ஸ் கமிஷன் ஏஜென்ட் அசோசியேஷன் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் 50-ஆண்டுகளாக கருப்பகவுண்டர், பவிழம், பெரியகடை, முத்து விநாயகர் கோவில் வீதிகளில் செயல்பட்டு வரும் பழ கமிஷன் மண்டியை மாற்றி அமைத்துக்கொள்ள வேறு இடம் தருமாறு கோரிக்கை வைத்தனர்.


கோவை: பழ கமிஷன் மண்டியை இடம் மாற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் வாக்குறுதி அளித்தார்.

கோயம்புத்தூர் புரூட்ஸ் கமிஷன் ஏஜென்ட் அசோசியேஷன் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் 50-ஆண்டுகளாக கருப்பகவுண்டர், பவிழம், பெரியகடை, முத்து விநாயகர் கோவில் வீதிகளில் செயல்பட்டு வரும் பழ கமிஷன் மண்டியை மாற்றி அமைத்துக்கொள்ள வேறு இடம் தருமாறு கோரிக்கை வைத்தனர்.



கோவையின் முக்கிய பகுதிகளில் செயல்பட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. குடியிருப்புகள், தங்கநகை வியாபாரம், பள்ளி மற்றும் வர்த்தகநிறுவனகள் அதிகம் உள்ளதால், வாகனங்களின் வருகை எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. ஆகவே, பழ கமிஷன் மண்டியை மாற்றி அமைத்திட மாற்று இடம் அரசு ஒத்துழைக்க வேண்டும், என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், பழ கமிஷன் மண்டி கோவையின் முக்கிய வீதிகளில் அமைத்துள்ளதால் கனரக வாகனங்கள் இச்சாலை வழியே வரவேண்டியுள்ளது. இதனால் பெரிய கடைவீதியில் போக்குவரத்து நெரிசலால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், உடனடியாக இடத்தை ஒதுக்கித் தரக்கோரி முதலமைச்சரைச் சந்தித்து மனு அழித்த நிலைமையில் அவர் உடனடியாக மாற்றித் தருகின்றோம் என்று வாக்குறுதிக்கொடுத்தார். மேலும், புல்லுக்காடு, சுங்கம், பைபாஸ், போன்ற பகுதிகளில் அமைத்தால் போக்குவரத்துக்கு எளிதாக அமையும் என்றும் தங்களுக்குக் கனரக வாகனத்தின் செலவு குறையும் என்றும் குறிப்பிட்டனர்.

பழ கமிஷன் மண்டியால் மாநகராட்சிக்கு மாதம் 30,000 ரூபாய் வருமானம் வருகின்றது. இதனைக் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்ததை அடுத்து, கோவை ஆணையாளரிடம் கலந்தாலோசித்த பின் உடனடி முடிவு எடுக்கப்படும் என்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...