திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு மதுபோதையில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இடையே மோதல் - ஒருவர் குத்திக்கொலை..!

ஆம்புலன்ஸ் டிரைவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பாக மதுபோதையில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் முத்தனம்பாளையம், பாலாஜி நகரை சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவர் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை முன்பு தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார்.

அதே பகுதியில் மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவாக உள்ள விக்னேசின் நண்பர் மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த அசோக்குமார். இந்நிலையில் நேற்று இரவு இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் இரண்டு ஆம்புலன்ஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. ஆத்திரமடைந்த அசோக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேசின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் விக்னேஷ் இறந்து கிடந்துள்ளார்.

பின்னர், இது குறித்து அக்கம்பக்கத்தினர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்து அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

ஆம்புலன்ஸ் டிரைவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...