திருப்பூரில் கொலை குற்றவாளியை கைது செய்யாத போலீசாரை கண்டித்தும் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி இறந்தவரின் குடும்பத்தார் ஆட்சியரிடம் மனு..!

கொலை நடந்து மூன்று மாதங்கள் ஆகியும் போலீசார் இதுவரை கொலையாளிகளை பிடிப்பதில் தாமதம் காட்டி வருவதாகவும், விபத்து என கூறி வழக்கை முடிக்க இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் கொலை குற்றவாளியை கைது செய்யாத போலீசாரை கண்டித்தும் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும் இறந்தவரின் குடும்பத்தார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த வீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் - மாரியம்மாள் தம்பதியரின் மகன் கோபிநாத். இவர் அப்பகுதியில் உள்ள அரிசி ஆலையில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி மடத்துப்பாளையம் என்ற பகுதியில் பல இடங்களில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.



இதனிடையே, கொலை நடந்து மூன்று மாதங்கள் ஆகியும் போலீசார் இதுவரை கொலையாளிகளை பிடிப்பதில் தாமதம் காட்டி வருவதாகவும், மேலும் விபத்து என கூறி வழக்கை முடிக்க இருப்பதாகவும் கூறும் கோபிநாத்தின் பெற்றோர் உடனடியாக கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் அல்லது வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



மேலும், இப்பிரச்சனையில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து தற்கொலை செய்யப்போவதாக கோரி, கொலை செய்யப்பட்ட கோபிநாத்தின் பெற்றோர் கண்ணீர் மல்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...