கோவில்களை பராமரிக்க திறமை அற்றதாக அறநிலையத்துறை உள்ளது- பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச் ராஜா.!!

அறநிலையத்துறைக்குக் கீழ் உள்ள கோவில்களைப் பராமரிக்கத் திறமை அற்றதாக அறநிலையத்துறை உள்ளது என அறநிலையத்துறை உடனடியாக ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும், அதற்கான பணிகளை நாங்கள் செய்து வருகிறோம் என ஹெச் ராஜா பேட்டி.


கோவை: அறநிலையத்துறைக்குக் கீழ் உள்ள கோவில்களைப் பராமரிக்கத் திறமை அற்றதாக அறநிலையத்துறை உள்ளது என அறநிலையத்துறை உடனடியாக ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும், அதற்கான பணிகளை நாங்கள் செய்து வருகிறோம் என திருப்பூரில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச் ராஜா பேட்டியளித்துள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நெருப்பெரிச்சல் மண்டல பாஜக சார்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச் ராஜா கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவில் விரைவில் 100 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளால் முடியாததைப் பிரதமர் மோடி செய்திருக்கிறார் எனவும், தமிழகத்தில் தடுப்பூசி முகாம்களில் மத்திய அரசால் இலவசமாக வழங்கப்பட்ட தடுப்பூசி என விளம்பரப் பதாகை வைக்க வேண்டும் எனவும் அதேபோல் ரேஷன் கடைகளிலும் மத்திய அரசின் தொகுப்பின் கீழ் வழங்கப்படும் அரிசி குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அறநிலையத்துறை சார்பில் கோவில்களிலிருந்து தங்கத்தை எடுக்கும் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், தங்கத்தை உருக்கும் திட்டம் குறித்த அரசாணை அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப் படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

அறநிலையத் துறைக்குக் கீழ் உள்ள கோவில்களைப் பராமரிக்கத் திறமையற்ற துறையாக இருப்பதாகவும், அறநிலையத்துறையின் கீழ் உள்ள 20-சதவீத கோயில்கள் பராமரிப்பில்லாமல் பயன்பாடற்று கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் புதிய கோவில்களைக் கையகப்படுத்துவதை அறநிலையத்துறை கைவிட வேண்டும் எனவும் உடனடியாக ஆலயங்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும். அதற்கான பணிகளைச் செய்து வருவதாகவும் தெரிவித்தார். ஆனால் அதுவரை சட்டப்படி கோவில்களைப் பராமரிக்க வேண்டும் எனவும் அறநிலையத் துறையில் உள்ள குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வேறு துறைகளுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதேபோல் அறநிலையத்துறையின் கீழ் கட்டப்படும் கல்லூரிகளில் மதக் கல்வி மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.



இந்நிகழ்வில் பாஜகவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...