தொடர்ந்து காலை முதல், கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனாருக்கு சொந்தமான வீட்டில் சோதனை..!

கோவை ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள எஸ்.என்.வி. கார்டன் பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் மாமனாருக்கு சொந்தமான வீட்டிலும் காலை 6 மணி முதல் பெண் அதிகாரி உட்பட 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.


கோவை: தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், என 43 இடங்களில் இச்சோதனையானது நடைபெற்று வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று வழக்குப்பதிவு செய்து உள்ளது. இதை தொடர்ந்து, அவருடைய இல்லம், அலுவலகம் அவரது உறவினர்கள் இல்லங்கள் ஆகிய இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவையில் ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலை எஸ்.என்.வி., கார்டன் பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவின் தந்தைக்கு சொந்தமான வீட்டிலும் காலை 6 மணி முதல் பெண் அதிகாரி உட்பட 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோவை வரும்போது, இந்த வீட்டில் தங்குவது வழக்கம் என கூறப்படும் நிலையில், அதனடிப்படையில், சோதனையானது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...