வால்பாறையில் கடந்த மாதம் பிடிக்கப்பட்ட புலியின் உடல்நிலை குறித்து வனத்துறை முதன்மை வனபாதுகாவலர் நேரில் ஆய்வு..!

வனத்துறை வல்லுனர்கள் புலியை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் குணமடைந்த பின்னர் குட்டிபுலி மீண்டும் வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என்று தெரிவித்தார்.


கோவை: வால்பாறையில் கடந்த 28ம் தேதி பிடிக்கப்பட்ட புலியின் உடல்நிலை குறித்து வனத்துறை முதன்மை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் நேரில் ஆய்வு செய்தார்

கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் குடியிருப்பு பகுதியில் ஒற்றை புலி நடமாட்டம் இருப்பதாக கடந்த 28ம் தேதி அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இது குறித்து தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற மானாம்பள்ளி வனச்சரக மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது புலி அப்பகுதியில் இருப்பதை உறுதி செய்யப்பட்டனர்.

பின்னர், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் உத்தரவின் பெயரில் குடியிருப்பு பகுதியில் இருந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் ஈடுபட்டு புலியை பிடித்தனர்.

அப்போது, புலி மிகவும் சோர்வுற்ற நிலையிலும், உடலில் காயங்களுடன் மற்றும் முள்ளம் பன்றியுடன் சண்டையிட்டதால் முள்ளம் பன்றியின் முட்கள் புலியின் உடலில் குத்தி இருப்பதால் அங்கிருந்து நகர முடியாமல் இருந்ததையும் வனத்துறை உறுதி செய்தனர்.



இதையடுத்து, புலியை வால்பாறை வனச்சரக பகுதியில் உள்ள மனித விலங்கு மோதல் தடுப்பு அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு கால்நடை மருத்துவர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், மனித விலங்கு மோதல் அலுவலகம் நகர் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் உள்ளதால் வாகன இரைச்சல் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மேலும் புலி மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும் கூறி, புலியை அப்பகுதியில் இருந்து இடமாற்றம் செய்ய வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நிராஜ் உத்தரவின் பேரில் வால்பாறை வனச்சரக ரொட்டிக் கடை பகுதியில் உள்ள புலியை மானாம்பள்ளி வனச்சரகத்தில் இடமாற்றம் செய்ய வனத்துறை ஏற்பாடு செய்யப்பட்டு, பெரிய அளவில் கூண்டு அமைக்கப்பட்டு 13 நாட்களுக்குப் பிறகு மானாம்பள்ளி வனச்சரகத்தில் புலியை இடமாற்றம் செய்தனர்.



இந்த நிலையில், நேற்று புலியின் உடல் நலம் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக வனத் துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நிரஜ் மானாம்பள்ளி பகுதிக்கு நேரில் சென்று புலியை பார்வையிட்டார்.



இதனை தொடர்ந்து பேசிய அவர், புலி மிகவும் சுறுசுறுப்புடன் நல்ல நிலையில் உள்ளதாகவும் மேலும் மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறை வல்லுனர்கள் புலியை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இவர்கள் முடிவு செய்த பின்னர் குட்டிபுலி மீண்டும் வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...