திருப்பூரில் கீழே கிடந்த தங்கச் செயினை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த முதல்நிலை காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்..!

செயினை பத்திரமாக காவல் நிலையத்தில் கொடுத்த திருப்பூர் தெற்கு காவல் நிலைய முதல்நிலைக் காவலர் ராதாகிருஷ்ணனுக்கு காவல்துறையினர் மற்றும் செயின் உரிமையாளர் பாராட்டுக்கள்.



திருப்பூர்: திருப்பூரில் ஜவுளிக்கடையில் கீழே கிடந்த தங்கச் செயினை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த முதல்நிலை காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திருப்பூர் வாவிபாளையம் பகுதியைச் சேர்ந்த தேவி, இவர் திருப்பூரில் குமரன் சாலையில் உள்ள தனியார் பத்திர டைபிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். இவர், சனிக்கிழமை இரவு தீபாவளி பண்டிகைக்காக தனது குடும்பத்துடன் திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் உள்ள தனியார் ஜவுளி கடைக்கு சென்றுள்ளனர். பின்னர், அங்கே அனைவருக்கும் உடைகளை வாங்கிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவர் கழுத்திலிருந்த 1.5 சவரன் நகை கீழே விழுந்துள்ளது. இதை கவனிக்காத தேவி, அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். 

இந்தநிலையில், அந்த கடைக்கு தீபாவளி உடைகள் வாங்குவதற்காக வந்த திருப்பூர் தெற்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது, தங்கச் செயின் கீழே கிடப்பதை பார்த்து அந்த செயினை எடுத்த காவலர் ராதாகிருஷ்ணன் அந்த தனியார் கடையின் மேலாளரிடம், அவரது முழு விவரங்களையும் கொடுத்துவிட்டு, இந்த செயினை காணவில்லை என யாராவது கேட்டால் அவர்களை என்னை தொடர்பு கொள்ளுங்கள் என கூறிவிட்டு வந்துள்ளார்.



பின்னர், செயினை பறிகொடுத்த தேவி அந்த தனியார் கடையின் மேலாளரிடம் தன்னுடைய செயினை காணவில்லை என புகார் அளித்துள்ளார். உடனடியாக, அந்த ஜவுளிக் கடை மேலாளர் திருப்பூர் தெற்கு காவல் நிலைய முதல் நிலை காவலருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர், முதல்நிலைக் காவலர் ராதாகிருஷ்ணன் அவர்களை தொடர்புகொண்டு செயின் பற்றிய முழு விவரத்தை கேட்டுவிட்டு, அடுத்த நாள் காலை காவல் நிலையத்தில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். 



அதன்படி, நேற்று காலை செயினை பறிகொடுத்த தேவியிடம் காவல் ஆய்வாளர் பிச்சையா முன்நிலையில் அந்த செயின் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...